Top posting users this month
No user |
ஜே.ஆர். ஜயவர்தனவினால் முடியாததை செய்த சுமனதாச: ரஞ்சன்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் செய்ய முடியாத காரியத்தை காலியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதம ஜோதிட ஆலோசகர் சுமனதாச செய்து காட்டியுள்ளார் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவரை தோற்கடிக்க முடியாத வகையிலேயே ஜே.ஆர்.ஜயவர்தன அரசியல் அமைப்பினை உருவாக்கியிருந்தார்.
எனினும் காலியைச் சேர்ந்த சுமனதாச அபேகுணவர்தன என்னும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஜோதிட ஆலோசகர் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னதாகவே மஹிந்தவை விரட்டிவிட்டார்.
மஹிந்த ராஜபக்சவை எமக்கு விரட்ட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
சுமனதாசவிற்கு யார் திட்டினாலும் மனட்சாட்சிக்கு அமைவாக என்னால் அவரைத் திட்ட முடியாது.
ஏனெனில் அவர் தான் எமகண்ட நேரத்தை சரியாக கணித்து கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விஹாரைகளுக்கு சென்று கூக்குரலிடுவது நாடு மீதோ அல்லது மக்கள் மீதோ உள்ள நேசத்தினால் அல்ல.
அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தச் சென்றால் இதோ குடும்பத்தை வேட்டையாடுவதாக மஹிந்த குற்றம் சுமத்துகின்றார்.
ஆம் நாம் வேட்டையாடுகின்றோம். நாம் வேட்டையாடுவது கள்வர்களையே.
அமைச்சரவை அமைச்சர்கள் கைவிலங்கிட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதனை இதற்கு முன்னர் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கின்றேன் என ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum