Top posting users this month
No user |
சம்மாந்துறையில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு
Page 1 of 1

சம்மாந்துறை கோரக்கர்கோயில் தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த.சா.தரம் பயிலும் மாணவியான கனகசூரியம் நிலக்சிகா(15) நேற்று தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
கோரக்கர்கோயில் உதயபுரம் தமிழக்குறிச்சி 4ஆம் பிரிவிலுள்ள அவரது வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்ற சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.கருணாகரன் தூக்கில் தொங்கிய மாணவியைப் பார்வையிட்டு அறிக்கையிட்டார்.
காலையில் நிலக்சிகாவின் தாயார் வேலைக்கு சென்றிருந்தார்.அண்ணனும் தம்பியும் பாடசாலைக்குச் சென்றிருந்தனர். இவர் பாடசாலை செல்வதாகக்கூறிவிட்டு வீட்டிலேயிருந்திருக்கிறார். அச்சமயமே அவர் தூக்குப்போட்டிருக்கக்கூடுமெமென சந்தேகிக்கப்படுகிறது.
பாடசாலைவிட்டு 1.40 மணியளில் வீடு வந்தபோதுதான் சம்பவம் வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்குடாவில் வாகன விபத்து: 14 பேர் காயம்
கல்குடா கல்வி வலய ஆசிரியர்கள் கொழும்பு மீபே தெற்காசிய ஆசிரியர் வள நிலையத்தில் கருத்திடப்பொருள் செயலமர்வில் கலந்து கொண்டு மட்டக்களப்புக்கு திரும்பிய போது வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கல்குடா வலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் பலர் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான பேருந்தில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் புறநகர்ப் பகுதியில் வைத்து பார ஊர்தி ஒன்றுடன் மோதியதில் 11 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன், மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
பார ஊர்தி ஓட்டுனரின் அசமந்தப் போக்கே குறித்த விபத்திற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம் காரணமாக 16 அடி பள்ளத்தில் விழ வேண்டிய பேருந்தை ஓட்டுனரின் புத்திசாலித்தனத்தாலும், சாமர்த்தியத்தினாலும் பயணிகனை காப்பாற்றுவற்காக மறுபக்கத்திலிருந்து மரத்தில் மோதி பயணிகளின் உயிரைப் காற்றியுள்ளார் என காயமடைந்த அதிபர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum