Top posting users this month
No user |
Similar topics
நித்யானந்தாவால் எனது உயிருக்கு ஆபத்து! மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்
Page 1 of 1

நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பரபரப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மதுரை ஆதீன மட இளைய ஆதீனமாக 2012-ல் நித்யானந்தா நியமிக்கப்பட்ட நியமனத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனு முதலில் விசாரணைக்கு வந்த போது, மதுரை ஆதீனம் மற்றும் நித்யானந்தா ஆகியோர் சேர்ந்து மனுவை தள்ளுபடி செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் பிறகு ஆதீனம், நித்யானந்தா இடையே மோதல் ஏற்பட்டதால் இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆதீனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் போது, மதுரை ஆதீனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியை நியமனம் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு.
பிடதி ஆசிரம தலைமை நிர்வாகியான நித்யானந்தா என்னிடம் ஆசி பெறவும், மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தர் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் ஆதீன மடம் வந்தார்.
அவரது நடவடிக்கை ஆதீனத்துக்கு இணையாகவும், ஆதீனத்தை விட மேலானதாகவும் இருந்தது.
மேலும், அவர் தன்னை கடவுளாக கூறிக் கொண்டதோடு, தன்னைத்தானே 293-வது ஆதீனம் என அறிவிக்க தொடங்கினார்.
இந்நிலையில், நித்யானந்தா மீதுள்ள பாலியல் வழக்குகள் எனது கவனத்துக்கு வந்ததையடுத்து 19.10.2012-ல் அவரை மடத்திலிருந்து வெளியேற்றினேன்.
அவர் ஆதீனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபட்டார். அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை தயாரித்தார்.
அவற்றில் நான் சுயநினைவுடன் கையெழுத்திடவில்லை. திருட்டுத்தனமாக மோசடி செய்து நித்யானந்தா மிரட்டி ஆவணங்களில் என்னிடம் கையெழுத்து பெற்றார்.
அந்த ஆவணங்களை பல வழக்குகளில் நித்யானந்தா அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த ஆவணங்கள் ஆதீனத்தை கட்டுப்படுத்தாதது.
நித்யானந்தா ஆதீன மடத்தின் பெருமையை சீரழிக்க இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் புகார் அளித்துள்ளேன்.
நித்யானந்தா முறைப்படி நியமனம் செய்யப்படவில்லை. எனவே, அவரை முறைப்படி நீக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 1-ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகை ரதி தனது கணவர் மீது பொலிசில் பரபரப்பு புகார்
» தேசிய கொடியை அவமதித்த மோடி! பொலிசில் பரபரப்பு புகார்
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum