Top posting users this month
No user |
Similar topics
இந்தியா தான் எனது மதம்: மௌனம் கலைத்து உணர்ச்சி வசப்பட்ட மோடி
Page 1 of 1

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் நடக்கும் மதமாற்ற சம்பவங்கள், தாக்குதல்கள் தொடர்பாக முதன்முறையாக மக்களவையில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று மக்களவையில் இதுபற்றி பேசுகையில், ’முதன்மையானது இந்தியா’ என்பது தான் என் அரசாங்கத்தின் ஒரே மதம். அரசியலமைப்புச் சட்டம்தான் ஆன்மிக நூல்.
மதம் என்ற பேரில் முட்டாள்தனமான கருத்துகள் கூறப்படுவதை அனுமதிக்காமல் இருப்பது, பிரதமர் என்கிற முறையில் எனது பொறுப்பாகும்.
மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதற்கும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்ட இந்திய வரலாற்றைச் சிந்தித்தே அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இத்தேசம் பன்மைத்தன்மைகளால் நிறைந்திருக்கிறது, நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்காகவே இருக்கிறோம். அரசியல் சாசன கட்டமைப்புக்கு உட்பட்டு, இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மூவர்ணம் தவிர வேறு வர்ணத்தை நான் பார்க்கவில்லை.
இத்தேசத்தின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நம்மிடையே உள்ள பழமையான, பரம்பரை பரம்பரையாகத் தொடரும் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளைக் காண்போம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது ஆட்சியால் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் உலகநாடுகள்: மோடி பேச்சு (வீடியோ இணைப்பு)
» 'டிஜிட்டல் இந்தியா'-வின் விளம்பர தூதராக மாணவியை நியமித்த பிரதமர் மோடி
» இது தான் இந்து மதம்
» 'டிஜிட்டல் இந்தியா'-வின் விளம்பர தூதராக மாணவியை நியமித்த பிரதமர் மோடி
» இது தான் இந்து மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum