Top posting users this month
No user |
Similar topics
மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் முதலில் முன்னெடுத்தது இ.தொ.கா தான்: ஆறுமுகன் தொண்டமான்
Page 1 of 1

மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான அடிதத்தளத்தை இட்டது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை ஸ்டொனிகிளிப் தோட்டத்திலும், ஹட்டன் செனன் பிரதேசத்திலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் முடிவு பெற்று தற்போது அவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைகள் ஆரம்பிக்க போவதாகவும், பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தல் நடத்தப்போவதாகவும் கூறியிருக்கின்றார்கள்.
எது எப்படி இருந்தாலும் இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும். அதேபோல தான் ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என முடிவு எடுத்தோம். ஆனால் இன்று சிலர் கூறுகின்றனா்.
நாங்கள் ஆதரவு வழங்கியதால் தான் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார் என்று. ஆனால் மக்கள் சிந்தித்து இருந்தனா் அதனாலேயே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார். ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என மலையகம் மட்டுமில்லாமல் வட கிழக்கிலும் இவ்வாறு மாற்றம் ஏற்பட வேண்டும் என அவா்கள் நினைத்தார்கள்.
அதனாலேயே இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதே தவிர சிலர் கூறுகின்றது போல் தனிப்பட்ட ரீதியில் வரவில்லை. அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய போவதாக கூறி வருகின்றனர் மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான அடிதத்தளத்தை இட்டது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தான்.
இந்திய பிரதமர் வந்து மலையகத்தில் அடிக்கல் நாட்ட போகின்றார் என கேள்விப்பட்டேன். மார்ச் மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். அதன்போது அவா் இங்கு அடிக்கல் வைப்பார். இதே 5 மாதத்திற்கு முதல் வந்திருந்தாலும் அடிக்கல் வைத்திருப்பார்.
அவ்வாறே நடக்கின்றதே தவிர யாரும் தனிப்பட்ட முறையில் சென்று கூட்டிக்கொண்டு வரவில்லை. 4000 வீடு திட்டத்தை கொண்டு வந்ததும் காங்கிரஸ், 3000 ஆசிரியர் நியமனங்களை கொண்டு வந்ததும் காங்கிரஸ், பரீட்சை வைத்ததும் காங்கிரஸ் தான்.
மலையகத்தில் காங்கிரஸ் அடித்தளமிட்டதுக்கு தான் மற்றவர்கள் உள்நுழைகின்றனா். மார்ச் மாதம் 30ஆம் திகதியோடு கூட்டு ஒப்பந்தம் முடிகின்றது. அடுத்து சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தயிருக்கின்றோம். இந்த பேச்சுவார்த்தையை இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தான் மேற்கொள்ளவிருக்கின்றது.
மார்ச் 15ஆம் திகதிக்கு பிறகு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என முடிவு எடுத்திருக்கின்றோம். ஒரே சம்பளமாக பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எல்லோருக்கும் ஒரே சம்பளமாகவும் அதிகமாக உழைக்கின்றவர்களுக்கு மேலதிகமாக சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதுமாகவும் அந்த அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் எடுத்துள்ளோம்.
மக்கள் கட்டுப்பாடாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என இதன்போது அவா் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆறுமுகன் தொண்டமான் யாருடைய பக்கம்? ரணில் கேள்வி
» தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பேன்: ஆறுமுகன் தொண்டமான்
» நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தோட்ட முகாமையாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum