Top posting users this month
No user |
Similar topics
காணாமல்போனோருடைய உறவுகளின் கண்ணீர்த் துளிகளால் சோகமயமானது யாழ். நகர்
Page 1 of 1

யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி, அவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியதுடன், யாழ்.நகரமே சோகமயமாய்க் காட்சியளித்தது.
இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் 11மணிவரையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றிருந்தது.
யாழ்.பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் வரையில் வழிநடையாக வந்து மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் “எங்களுடைய பிள்ளைகளை படையினர் அழைத்துச் சென்றனர். பிள்ளைகள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த நபர்கள் கடத்திச் சென்றார்கள்.
பின்னர் எங்கள் பிள்ளைகளை காணவில்லை. அங்கே இருக்கின்றார்கள், இங்கே இருக்கின்றார்கள். என கூறுகின்றார்கள். ஆனால் இது வரையில் பதில் எவையும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதியே நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர் என்றால், அமைதியான மனிதர் என்றால் எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் என மாவட்டச் செயலத்திற்கு முன்பாக மக்கள் நிலத்தில் வீழ்ந்து கண்ணீர்மல்க கதறியழுது தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் என உருக்கமான கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் யாழ்.மாவட்டச் செயலருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு துறைமுக நகர் திட்டம் மீளவும் முன்னெடுக்கப்படும்: இந்திய ஊடகம்
» கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்
» அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum