Top posting users this month
No user |
Similar topics
நேர்மையுடன் மக்கள் பணி ஆற்ற வேண்டியது அனைவரினதும் கடமை: உப தவிசாளர் செந்தூரன்
Page 1 of 1

கிளிநொச்சி மருதநகர் இராமநாதன் முன்பள்ளியில் மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகளையும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2014ல் இராமநாதன் முன்பள்ளிக்கு மற்றும் சனசமுநிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தளாபடங்களையும் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சத்தியானந்தம் தலைமையில் கடந்த 1ம் திகதி நடைபெற்றது.
இதில் மாந்தை கிழக்கு பிரதேசபையின் உப தவிசாளர் செந்தூரன் கரைச்சி பிரதேசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் உறுப்பினரான பாலாசிங்கசேதுபதி பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் முன்பள்ளி ஆசிரியர்கள் மாலைநேர கற்றல் மாணவர்கள் உட்பட பெற்றார்களும் கலந்துகொண்டனர்.
இங்கு கலந்துகொண்ட உபதவிசாளர் செந்தூரன் கருத்துக்கூறுகையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் இக்காலத்துக்கு தேவையான அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சிக்கு உரியது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் கரிசனை சேவை காரணமாக இந்த உதவிகளை நம்பிக்கையோடு புலம்பெயர் உறவுகள் தந்துவருகின்றார்கள்.
பொருளாதார ரீதியில் நலிந்த போன எமது மக்களின் பிள்ளைகளின் கல்விக்கான செலவு என்பதும் மிகப்பெரியது. அதை ஈடுசெய்வதற்கு பெற்றார்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். எனவே இந்த உதவிகள் பெரியவைதான. இன்று இந்த சமுகத்தை வழிநடத்துகின்றவர்ளிடம் பாரிய சமுகப் பொறுப்பு உண்டு. போருக்கு பின் இது மிகப்பாரியது. அதில் அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றார்கள்.
அன்றாடம் மக்களோடு பல்வேறு வகையில் உறவாடுகின்ற அரச அதிகாரிகள் தங்கள் கடமையின் தாற்பரியத்தையும் புனிதத்தையும் உணர வேண்டும். கடந்த காலத்தில் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக மாறிய அரச உயர் அதிகாரிகளால் நமது மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளார்கள். புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். மன அளவில் காயப்படுத்தப்பட்டுள்ளார். எனவே அத்தகைய அரச அதிகாரிகளின் கடந்த காலப்பணிகள் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவை. இதன் மூலம் நியாமற்ற முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெறப்படலாம் என தெரிவித்தார்.
கிளிநொச்சி இராமநாதன் முன்பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதனால் வழங்கப்பட்ட நிதியின் மூலம் முன்பள்ளி மற்றும் சனசமுக நிலைய வளயாகத்திற்கான சுற்று வேலிகளும் ஏனைய பணிகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டியது..
» ஐ.தே.கவின் புதிய தவிசாளர் வருகை! திஸ்ஸ அத்தநாயக்க விரட்டியடிப்பு
» சட்டவிரோத மணல் அகழ்வு பிரதேச வீதிகள் பாதிப்பு: மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum