Top posting users this month
No user |
வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்: கிழ.பிரதி தவிசாளர்
Page 1 of 1

புங்குடுதீவில் வித்தியாவை கொடூரமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டது போன்று இனி எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடா வண்ணம் குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை இருக்க வேண்டுமென என கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த யுத்தம் எமக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியிருந்தாலும் எமது மக்கள் மத்தியிலும் இளைஞர் யுவதிகளின் மத்தியிலும் பாரிய ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக் கொடுத்தது.
இத்தனை வடுக்களையும் தாண்டி எமது சமுகம் சீரழிந்து சின்னாபின்னமாகிச் செல்வது மிகவும் மனவேதனை தரும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
நாம் கடந்த காலங்களில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள், தற்போது யுத்தம் முடிவுற்ற ஒரு நல்ல நிலை வரும் போது அந்த இன்னல்களை விட பாரதூரமான செயற்பாடுகள் இந்நாட்டில் அதிலும் வட, கிழக்கு தமிழர் பூர்வீகப் பிரதேசங்களில் இடம்பெறுகின்றதென்றால் மிகவும் வெட்கிக்க வேண்டிய விடயமாகும்.
அண்மையில் புங்குடுதீவு மாணவி கோரமாக கொல்லப்பட்ட சம்பவமானது வடக்கு தழிழர் பிரதேசத்தில் மட்டுமல்லாது நாடு பூராகவும் பாரிய விளைவினை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மிருகத்தனமான செயல் என்றும் கூற முடியாது மிருகத்தினை விட கேவலமானவர்களின் செயற்பாடே இவ்வாறு அமையும்.
இவர்கள் வன்மையாகக் தண்டிக்கப்பட வேண்டும்.
இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை எம் பெண்களுக்கு இம்மண்ணில் ஒரு பாதுகாப்பினை உறுதிப்படுத்த உந்துதலாக இருக்க வேண்டும்.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லிக் கொண்டு தினம் தினம் அந்த பெண்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் அந்த நிலைமை மாற வேண்டும்.
ஒரு நாட்டில் ஒரு பெண் நள்ளிரவில் தனியாக வெளியில் நடமாடும் நிலை என்று ஏற்படுகின்றதோ அன்று தான் அந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது.
ஆனால் தற்போதைய நிலையில் பெண்கள் பகலிலேயே பாதுகாப்பாக நடமாடுதல் என்பது பாரிய விடயமாக இருக்கின்ற போது எங்கணம் இரவில் நடமாடுவது.
இவ்வாறான நிலைமைகள் இடம்பெறும் போது எமது நாட்டில் சுதந்திரம் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றதாக உணர முடிகின்றது.
தற்போதைய சூழலில் கடந்த அரசாங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிந்தனையின் விளைவினால் ஏற்பட்ட தாக்கங்களே தற்போது எமது வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்கள்.
அபிவிருத்தி எனும் போலி மாயையைக் காட்டி எமது தமிழ் இளைஞர் யுவதிகளை தவறான வழிநடத்தலுக்குள் இட்டுச் சென்று அன்றைய அரசாங்கம் நடாத்திய திட்டமிட்ட நாடகம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
அதிலும் எமது வடக்கு மாகாணம் மிகவும் மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ளது.
உறவுகள் என்பது தெரியாத அளவு போதை, அந்த போதையால் ஏற்பட்ட காமம் அதனை அந்த உறவுடனயே தீர்த்து அந்த உறவை மாய்த்த படுகேவலமான பிறவிகள் எமது போராட்ட மண்ணில் தான் பிறந்திருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது அவர்கள் பிறப்பினை சந்தேகம் கொள்ளும் அளவிற்கு வெட்கிக்கும் நிலை தோன்றுகின்றது.

இத்தனை வடுக்களையும் தாண்டி எமது சமூகம் சீரழிந்து சின்னாபின்னமாகிச் செல்வது மிகவும் மனவேதனை தரும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
எமது பண்பாடுகள், கலாச்சாரம், எமது இனம், எமது உறவுகள், மிகவும் புனிதமானவைகள் அவை பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.
எமக்கு தற்போது இருக்கும் செல்வங்கள் எமது எதிர்கால மாணவச் செல்வங்கள் அவர்களை இன்னும் இன்னும் பாதுக்க வேண்டியது எம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.
இவர்களில் எமது பெற்றோர்கள் மிகவும் கரிசனையுடன் இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நாம் கண்ணோட்டமாக இருக்க வேண்டும்.
தற்போதைய காலமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்லன பலவற்றைக் கொண்டிருந்தாலும் கெட்ட விடயங்கள் அதைவிட அதிகமாக இருக்கின்றன.
அவற்றில் இருந்து எமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக காப்பாற்ற வேண்டும்.
எமது வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டுமல்லாது எமது இனத்தை சேர்ந்த இன்னுமொரு மாணவிக்கோ, பெண்ணுக்கோ இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
இந்த காடையர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அனைவருக்கும் பாடமாகவே அமைய வேண்டும் என்று பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum