Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு

Go down

ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு Empty ஜனாதிபதி, பிரதமருடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சந்திப்பு

Post by oviya Fri Feb 06, 2015 1:09 pm

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியான சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியாங் சோவு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள சீன உதவி வெளிவிவகார அமைச்சர் இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்க உள்ளார்.

அதேவேளை சீன உதவி வெளிவிவகார அமைச்சர் நேற்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட லியூ ஜியாங் சோவு, இரண்டு நாடுகளின் உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மங்கள சமரவீரவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

சீன விசேட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

சீன ஜனாதிபதியின் விசேடப் பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

சீன விசேடப் பிரதிநிதி அந்நாட்டு துணை வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியாங் சோவு இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

புதிய அரசாங்கத்திற்கு சீன ஜனாதிபதி, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக சீன துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்துடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சீன அரசாங்கம், இலங்கைக்கு விசேட பிரதிநிதியாக சீன துணை வெளிவிவகார அமைச்சரை அனுப்பி வைத்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum