Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! என் தீர்ப்பும் இறுதியானது அல்ல!- நீதிபதி குமாரசாமி

Go down

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! என் தீர்ப்பும் இறுதியானது அல்ல!- நீதிபதி குமாரசாமி Empty ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! என் தீர்ப்பும் இறுதியானது அல்ல!- நீதிபதி குமாரசாமி

Post by oviya Fri Feb 06, 2015 1:05 pm

ருக்கு பரிமாற்றங்கள் செய்ததாகவும், அதன் மூலம் சசிகலா, சுதாகரன், இளவரசி கூட்டாகவும், தனித்தனியாகவும் 32 கம்பெனிகளை தொடங்கி இந்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளதாகவும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால், இந்த வழக்கு காலகட்டத்துக்கு முன்பே ஜெயலலிதாவும், சசிகலாவும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் சேர்ந்து வழக்கு காலகட்டத்துக்கு முன்பு 1988-89-ல் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் தொடங்கினர். அவற்றில் மட்டும் ஜெயலலிதா பார்ட்னராக இருந்தார். அதற்கு முறையாக வருமானவரியும் கட்டியிருக்கிறார்.

மற்ற எந்த ஒரு கம்பெனியிலும் ஜெயலலிதா பார்ட்னராக இல்லை. அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் 32 கம்பெனிகளுக்கு எந்த ஒரு பண பரிமாற்றமும் நடைபெறவில்லை.

இந்திய தண்டனைச் சட்டம் 109 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளில் கூட்டுச் சதி செய்து வருமானம் ஈட்டினார்கள் என்பதும் தவறு.

தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரும் ஜெயலலிதாவிடம் இருந்து பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. நான்கு பேரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள் என்பதைத் தவிர எந்த ஓர் ஆதாரங்களும் கிடையாது.

32 கம்பெனிகளின் உரிமையாளர்கள் குறித்தும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் விசாரிக்கவில்லை. இதையெல்லாம் சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னோம். ஆனால், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் உங்களுக்கு பணிச் சுமை அதிகமாகியுள்ளது.

நீதிபதி குமாரசாமி: ஆவணங்களையும், ஆதாரங்​களையும், சாட்சியங்களையும் பார்க்காமல் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்? யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம். என்னுடைய தீர்ப்புகூட இறுதியானது இல்லை. அதன்மீது உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போகலாம்.

பசந்த்: வழக்கு காலகட்டத்துக்கு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என நான்கு பேரின் சொத்து மதிப்பை தனித்தனியாகப் பதிவு செய்யப்படாத குளறுபடியால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

நீதிபதி: அப்படியென்றால் வழக்கு காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வந்த வருமானத்தின் ஆதாரங்களைக் காட்டுங்கள்.

பசந்த்: இதைக் கேட்பீர்கள் என்று நினைக்கவில்லை. அதனால் எடுத்து வரவில்லை.

'அவிழ்க்காத முடிச்சுகள்!’

பசந்த்: 32 கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இது வழக்கு காலகட்டத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த கம்பெனிகளுக்கு தனித்தனியாக உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வங்கிகளில் கடன் வாங்கியும், சில கம்பெனிகள் கிடைத்த லாபத்தின் மூலமே கம்பெனிகளை நடத்தி வந்தார்கள். ஜெயலலிதாவும், சசிகலாவும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்கள்.

நீதிபதி: அவை எப்போது தொடங்கப்பட்டன?

பசந்த்: 1988-89-ம் வருடங்களில் தொடங்கப்பட்டன.

நீதிபதி: நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான ஆதாரங்களின் ஆவணங்களைக் கொடுங்கள்.

பசந்த்: (அது பற்றி தேடிக்கொண்டு இருந்தார்.)

நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) 32 கம்பெனிகள் பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரம் உள்ளதா?

பவானி சிங்: (பதில் சொல்லவில்லை.)

நீதிபதி: இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யார்?

பவானி சிங்: (லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தத்தைக் கூப்பிடுகிறார்.)

சம்பந்தம்: நான்தான்.

நீதிபதி: குற்றவாளிகள் தரப்பு சொல்லுவது உண்மையா?

சம்பந்தம்: உண்மையில்லை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரசு வழக்கறிஞர் மராடி: குற்றவாளிகள் பங்குதாரர்களாக உள்ள 32 கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு 1988-89-களில் தொடங்கப்பட்டாலும் அதில் பணப் பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த 91 முதல் 96 காலகட்டத்தில்தான் இந்த 32 கம்பெனிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு அரசு சாட்சியங்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

நீதிபதி: (பசந்தை பார்த்து...) நீங்கள் ஒரு வாதத்தை வைப்பதற்கு முன் அதற்குத் தேவையான முழு விவரங்களையும் தயார் செய்துகொண்டுதான் வாதிட வேண்டும். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அரசு சாட்சியங்கள் 182, 201 படியுங்கள். அதை முழுமையாகப் படி​யுங்கள். அப்போதுதான் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்​களுக்குப் புரியும். இந்த வழக்கின் தீர்ப்பில் கீழ் நீதிமன்ற நீதிபதி 150 முடிச்சுகள் போட்​டுள்ளார். அதில் இதுநாள் வரை ஒன்றைக்கூட நீங்கள் அவிழ்க்கவில்லை.

பசந்த்: அந்த முடிச்சுகளைச் சொல்லுங்கள்.

நீதிபதி: அதை நீங்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும். கீழ் நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் உங்கள் மீது சுமத்தி இருக்கின்ற குற்றச்​சாட்டுகளை ஆதாரங்களோடு மறுப்பதோடு, அவர் தீர்ப்பில் உங்கள் சொத்துக் குவிப்பு ரூ.55 கோடி​யாக எழுதியிருக்கிறார். அதற்கு சரியான ஆதாரத்தோடு சரியான கணக்குகளை காட்டுங்கள்.

(நீதிபதி இப்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரசு சாட்சியங்களைத் தேடி எடுத்தார்கள்.)

சாட்சி எண் 182 என்பது சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் அருணாசலம். சாட்சி எண் 201 என்பது சென்னை மயிலாப்பூர் கனரா வங்கி மேலாளர் வித்யாசாகர். இவர்கள் இருவரும் கொடுத்த வாக்கு மூலத்தை இரண்டு நாள் முழுவதும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் பசந்த்தும், மணிசங்கரும் நீதிமன்றத்துக்கு வாசித்துக் காட்டினார்கள்.

''நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்கத் தயாரா?'

பசந்த்: ஜெயலலிதாவிடமிருந்தும், என் மனுதாரர் சசிகலாவிடமிருந்தும் 32 கம்பெனி​களுக்கு பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை.

நீதிபதி: (பவானி சிங்கிடம்) என்ன சொல்கிறீர்கள்?

பவானி சிங்: அது உண்மையில்லை.

நீதிபதி: அதை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா? ஆதாரத்தைக் கொடுங்கள்?

பவானி சிங்: தற்போது இல்லை.

நீதிபதி: அவர்கள் சொல்லும் புகாருக்கு நுனி விரலில் பதில் கொடுக்க வேண்டும். இப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது. எப்படி கீழ் நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடினீர்கள்?

பவானி சிங்: ஆதாரங்களை நாளைக்குக் கொடுக்கிறேன்.

நீதிபதி: (தி.மு.க வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

சரவணன்: நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு ரூ.18 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என டெபாசிட் தொகை வசூலித்தார்கள். அதில் ரூ.14 கோடி வசூலானது. அந்தப் பணம் 32 கம்பெனிகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் 44-வது பிறந்த நாளுக்கு டிடியாக வந்த ரூ.2.15 கோடி பணமும் கம்பெனிகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டது. அதை கீழ் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறோம்.

நீதிபதி: (சரவணனைப் பார்த்து) உங்கள் கட்சி பத்திரிகைக்கு இதுபோன்ற டெபாசிட் வசூலிக்கப்படுகிறதா? உங்கள் தலைவர் பிறந்த நாளுக்கு கிஃப்ட் வாங்குவதில்லையா?

சரவணன்: எங்கள் தலைவர் கிஃப்ட் வாங்க மாட்டார்.

நவநீதகிருஷ்ணன்: கருணாநிதி பிறந்தநாளின்போது உண்டியல் வைத்து பணம் வசூல் செய்வார். கருணாநிதி அறிவியல்பூர்வ குற்றவாளி என சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது.

சரவணன்: கனம் பொருந்திய நீதிபதி அவர்களே! இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அவர்கள் தயார் என்றால் நாங்களும் தயார்.

'நல்லம நாயுடுவை வரச் சொல்லுங்கள்...'

நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) சி.டி., ஃபைல், கேஸ் டைரி எங்கே? (சி.டி., ஃபைல் என்பது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்போது சாட்சியங்கள் சொல்லும் வாக்குமூலங்களையும் அதை போலீஸார் பதிவு செய்வதையும் வீடியோவில் பதிவு செய்வார்கள். இதுதான் சி.டி., ஃபைல் என்பார்கள். எஃப்.ஐ.ஆர் போட்டதில் இருந்து அந்த வழக்கின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவு செய்வது கேஸ் டைரி என்பார்கள்.)

பவானி சிங்: (ஊழல் தடுப்பு அதிகாரி சம்பந்தத்தைக் கூப்பிட்டார்)

நீதிபதி: இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி யார்?

சம்பந்தம்: நல்லம நாயுடு.

பவானி சிங்: அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

நீதிபதி: அவர் ஓய்வு பெற்றாலும் நீதிமன்றத்துக்கு பதில் சொல்லவேண்டியது அவருடைய கடமை. அதனால் அவரை கட்டாயம் வரச் சொல்லுங்கள்.

பசந்த்: சாட்சி: 182, சாட்சி: 201 ஆகிய இரண்டு வங்கி அதிகாரிகள் சொன்ன சாட்சியங்களின்படி ஏ1 ஜெயலலிதாவிடம் இருந்து யாருக்கும் பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என்பது நிரூபண​மாகிறது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் பணங்கள் அவர்​களுக்கே திருப்பி கொடுத்திருக்கிறோம். அதனால் வருமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நீதிபதி: அப்படியென்றால் மைனஸ் 13(1)ஈ போட்டு விடலாமா? (13(1)ஈ என்பது ஊழல் தடுப்புச் சட்டம்.)

பசந்த்: சிரிப்பு

நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

பவானி சிங்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு வசூலிக்கப்பட்ட தொகை சட்டத்துக்குப் புறமானது. அரசு தரப்பு சாட்சியங்கள் ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஜெயராமனின் வாக்குமூலத்தையும், கம்பெனிகளின் பதிவாளரின் வாக்குமூலத்தையும் நானும் படித்துக்காட்டிக் குற்றங்களை நிரூபிக்கத் தயார்.

குமார்: அந்த வாக்குமூலங்களில் ஒன்றும் இல்லை. ஜெயலலிதா வீட்டுச் செலவுகளும், கார்டனில் வளர்க்கப்பட்ட நாய்களுக்கு வாங்கிய கறியை பற்றித்தான் சொல்லியிருப்பார்.

நீதிபதி: சாட்சியங்கள் சட்டம் 10-ன்படி அவர்கள் படிப்பதற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்தானே? அதிலும்கூட சொத்துகள் இருக்கலாம். எப்போது படிக்கிறீர்கள்?

பவானி சிங்: திங்கட்கிழமை படிக்கிறேன்.

'கம்பெனி சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யவில்லை?'

கீழ் நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் கம்பெனிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், சயோனோரா, ரிவர்வே அக்ரோ புராடெக்ட், லெக்ஸ் பிராப்பர்ட்டிஸ், இண்டோ டோகா, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய கம்பெனிகளின் மேல்முறையீடு விசாரணையை நீதிபதி குமாரசாமி விசாரித்தார். கம்பெனிகளின் சார்பாக வழக்கறிஞர்கள் குலசேகரனும், படேலும் வாதிட்டார்கள்:

குலசேகரன்: இந்த கம்பெனிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் தொடர்பு கிடையாது. வழக்கு காலகட்டத்தில் ஏ2, ஏ3, ஏ4 யாரும் பங்குதாரர்களோ, இயக்குநர்களோ இல்லை.

நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) என்னை உச்ச நீதிமன்றம் ஏ1 முதல் ஏ4 இவர்களின் குற்றச்சாட்டுகளைத்தான் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது. இந்த கம்பெனி வழக்கை விசாரிக்க எனக்கு ஏன் போட்டார்கள்? கம்பெனிகளின் சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யவில்லை?

பவானி சிங்: அவர்கள் மேல்முறையீட்டுக்கு வந்திருப்பதால் பறிமுதல் செய்யவில்லை.

சட்டத்துக்குப் புறம்பாக ஆஜராகியுள்ளீர்!

நீதிபதி குமாரசாமி: (பவானி சிங்கைப் பார்த்து) அரசு வழக்கறிஞர் சிவில் வழக்காக இருந்தால் மட்டும்தான் கீழ் நீதிமன்றத்தில் இருந்து தொடர்ந்து மேல்முறையீட்டு விசாரணையிலும் ஆஜராகலாம். ஆனால், இந்த கிரிமினல் வழக்கில் அப்படி தொடர்ந்து ஆஜராக முடியாது. சட்டத்துக்கு புறம்பாக எப்படி இந்த வழக்கில் ஆஜரானீர்கள். இதுபற்றி முதன்மை நீதிபதியிடம் ஆலோசனை செய்யுங்கள்.

பவானி சிங்: இந்த வழக்கில் ஆஜராக என்னை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அனுமதித்து இருக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum