Top posting users this month
No user |
Similar topics
திருடர்களாக மாறிய காதலர்கள்: எல்லாம் ஆடம்பர மோகம்
Page 1 of 1

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக காதலர்களாக இருந்தவர்கள் திருடர்களாக மாறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சாந்திநகரை சேர்ந்தவர் துர்கா பவானி (21). இவர் பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டவர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இப்ராஹிம் பட்டினம் பகுதியைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி கிருஷ்ணம் ராஜுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
வேலை கிடைக்காத காரணத்தால், தனது காதலி துர்கா பவானியை திருட்டு தொழிலில் இறக்கினார் கிருஷ்ணம் ராஜு.
இதற்கு ஒப்புக்கொண்ட துர்கா பவானியும் கூட்ட நெரிசல் உள்ள பேருந்துகளில் ஏறி பெண்களிடம் நகை, கைப்பை போன்றவற்றை திருடிக் கொண்டு வந்து தனது காதலனிடம் கொடுப்பார்.
பின்னர் அந்தத் திருட்டு நகைகளை அடகுக் கடைகளில் விற்று அதை இருவரும் சரிபாதியாக பங்கு போட்டுக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
இதுவரை துர்கா பவானி 16 திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட 7 பேர் விஜயவாடா குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளைப் பிடிக்க வியூகம் வகுத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ.கிருஷ்ண குமார் தலைமையில் பொலிசார் கவர்னர்பேட்டை பகுதியில் ஒரு சினிமா திரையரங்கு முன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திருடிய நகைகளை அடகு வைக்க அந்த வழியாக கிருஷ்ணம் ராஜு சென்றுள்ளார்.
அவரைக் கண்டு சந்தேகமடைந்த பொலிசார் கிருஷ்ணம் ராஜுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், நடந்த விடயங்களை எல்லாம் கிருஷ்ணம் ராஜு பொலிசில் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் பொலிசார் துர்கா பவானியையும் கைது செய்து அவர்கள் திருடிய ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலர்கள் சரணாலயம்
» டீக்கடையில் பிடிபட்ட தீவிரவாதிகள்: காதல் மோகம் காரணமா?
» பணம் மேல் கொண்ட மோகம்…அடுக்கடுக்காக 3 கொலைகள்: திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum