Top posting users this month
No user |
டீக்கடையில் பிடிபட்ட தீவிரவாதிகள்: காதல் மோகம் காரணமா?
Page 1 of 1

தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பெரும் சவாலாக திகழும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அடிக்கடி மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவ்வப்போது தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் தமிழ்நாட்டிலும் தாக்குதல் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் கோவை மாவட்டத்தை யொட்டியுள்ள கேரள வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தாக்குதலில் ஈடுபடுவதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
கேரள காட்டுப்பகுதி வழியாக மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் தமிழக பொலிசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் வனப்பகுதிக்குள் நுழைந்து கேரள பொலிசார் நடத்திய வேட்டையில் மாவோயிஸ்டுகள் பலர் பிடிபட்டுள்ளனர்.
மேலும் கோவையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக பொலிசுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஆந்திராவை சேர்ந்த மேகாலி ராஜரெட்டி என்ற மாவோயிஸ்டு தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் கசிந்தது.
மாவோயிஸ்டு இயக்கத்தின் தென் மாநில தலைவனான கேரளாவை சேர்ந்த ரூபேஷ் என்பவரது தலைமையில், அவரது மனைவி சைனா மற்றும் அனுப், மதுரையை சேர்ந்த கண்ணன் என்கிற கார்த்தி, கடலூரை சேர்ந்த வீரமணி என்கிற ஈஸ்வரன் ஆகிய 5 மாவோயிஸ்டுகள் கோவையில் கூடி மிகப் பெரிய சதி திட்டத்துக்கு ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராஜரெட்டி தெரிவித்தார்.
இதைதொடர்ந்து ஆந்திர மாநில பொலிசார் ராஜரெட்டியை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் கோவைக்கு விரைந்தனர். தமிழக போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தமிழக கியூ பிரிவு டி.ஐ.ஜி.ஈஸ்வர மூர்த்தி, சூப்பிரண்டு பவானிஸ்வரி, கோவை மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோரும் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து பிடிக்க வியூகம் வகுத்தனர்.
இதன்படி கோவை கருமத்தம்பட்டியில் டீ கடை ஒன்றில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த தீவிரவாத கும்பல் தலைவன் ரூபேசையும், அவரது மனைவி சைனா மற்றும் கூட்டாளிகள் 3 பேரையும் பொலிசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதற்கிடையே தற்போது மாவோயிஸ்டு தீவிரவாத குழுக்களில் பெண் மோகம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் காதல் போட்டியால் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் மொழி ரீதியாகவும் மாவோயிஸ்டுகள் பிரிந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியும் உள்ளது. இதுவே மாவோயிஸ்டுகள் இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களாலேயே கோவையில் 5 மாவோயிஸ்டுகள் எளிதாக போலீசில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் கோவையில் சதி திட்டம் தீட்டி அவர்கள் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குல் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum