Top posting users this month
No user |
சக மாணவனுடன் பழக்கம்: கண்டித்து இடைநீக்கம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி
Page 1 of 1

பெங்களூரில் பள்ளி மாணவி ஒருவர், தன்னுடன் பயிலும் சக மாணவருடன் பழகியதை கண்டித்து இடைநீக்கம் செய்ததால் 10–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களுரு பொம்மனஹள்ளி ஓசூர் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 10–வது மாடியில் வசித்து வருபவர் டாக்டர் பிஜோய் குமார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு மோனாலி(15) என்ற ஒரே மகள் இருந்தாள். மேனாலி எச்.எஸ்.ஆர்.லே–அவுட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள்.
மோனாலிக்கு தனது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் மோனாலி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததால் மோனாலியும் அந்த மாணவனும், பள்ளியிலும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இதனை பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மோனாலி அங்கு அந்த மாணவனுடன் தனியாக நின்று பேசியுள்ளார்.
இதை கவனித்த பள்ளி முதல்வர் மோனாலியை தனது அறைக்கு அழைத்து கண்டித்ததுடன் மோனாலியின் தாயாரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு, மோனாலியை 2 நாள் பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளோம். அதனால் பள்ளிக்கு உடனே வந்து உங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மோனாலியின் தாயார் உடனே பள்ளிக்கு சென்று தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு வந்தவுடன் மகளை கடுமையாக கண்டித்ததுடன் படிப்பில் கவனம் செலுத்தும்படி மோனாலிக்கு அவரது தாயார் அறிவுரை கூறியுள்ளார்.
இதில் தாயாருக்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளியில் ஏற்பட்ட சம்பவத்தினால் மனமுடைந்திருந்த மோனாலி தனது படுக்கை அறைக்கு சென்றுள்ளார். பின்னர் திடீரென ஜன்னல் கதவுகளை திறந்து 10–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த மடிவாளா பொலிசார் மோனாலியின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum