Top posting users this month
No user |
Similar topics
மூவின ஒற்றுமையோடு இம்முறை தை மகள் பிறக்கின்றாள்
Page 1 of 1

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோரகள் நமக்குச் சொல்லி வைத்தனர். பன்னிரு மாதங்களில் முதன்மையான தை மாதம் தமிழர்களின் வாழ்வில் முக்கியமான மாதமாகும்.
வேளாண் செய் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாயப் பொருட்களை அறுவடை செய்து மகிழ்கின்ற மாதமும் இதுவே.
தமது விவசாயச் செய்கைக்குப் பெருந்துணையாக இருந்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கிப்படைத்து மகிழ்வடைகின்ற திருநாளும் தை மாதத்தில் வருவது பெருமைக்குரியது.
எனவே தைப் பொங்கல் என்பது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்ற திருநாள் என்பதோடு வேளாண் செய்கையில் அறுவடை செய்த தானியங்கள், பழ வகைகளை மற்றவர்களுக்குக் கொடுத்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறத்தை ஆரம்பித்து வைக்கின்ற நாளாகவும் தைப்பொங்கல் திருநாள் அமைகின்றது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம் முன்னோர்களின் அனுபவப் பகிர்வாயினும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் வாழ்வில் தை பிறந்த போதிலும் வழி பிறக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
சுருங்கக் கூறின் இந்த நிலைமை தமிழர்களுக்கு மட்டுமன்றி இலங்கைத் திருநாட்டிற்கும் பொருந்துவதாக இருந்தது. இன வன்மங்கள் அதனால் ஏற்பட்ட போர்ச் சூழல்கள், பயப்பீதியுடனான வாழ்வியல், போர் தந்த துன்பங்கள், இழப்புகள் என்ற அனைத்துமாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை.
ஆனால், இன்று பிறக்கின்ற தை மகள் ஏதோ ஒரு மன நிம்மதியை, ஆறுதலைத் தந்த திருப்தியில் பிறப்பது போன்ற உணர்வை அனுபவிக்க முடிகிறது.
ஆம், ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குப் பலத்தில் வெற்றி பெற்ற ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போது, இயல்பாகவே நாட்டில் அமைதியும், மன நிறைவும் ஏற்படத் தொடங்கி விடும். இத்தகையதொரு உணர்வு மக்களிடம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது.
இதற்கு மேலாக, வழமையை விட தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் இம்முறை களைகட்டியதென்றே கூறவேண்டும்.
அந்த வகையில் பிறக்கின்ற தை மகள், தமிழ் மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இலங்கைத் திருநாட்டிற்கும் புதிய வழியைத் தருவாள் என்று நம்பலாம்.
இவ்வாறனதொரு நம்பிக்கை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் ஆட்சி மாற்றம் என்பதைக் கூறித் தான் ஆக வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பெளத்த சிங்களம் என்பதே முதன்மைப்படுத்தப்பட்டது. கூடவே தமிழர்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் என்பன இம்மியும் கருத்தில் எடுக்கப்படவில்லை.
இத்தகைய நிலையில் தமிழ் மக்களின் மனநிலை என்பது ஒரு நிறைவான கட்டத்தில் இருக்கவில்லை. இலங்கைத் திருநாட்டில் நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டோம் என்ற வேதனை அனைத்துத் தமிழ் மக்களையும் பாதித்திருந்தது.
முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் தோல்வி, அந்தத் தோல்வி காரணமாகத் தமிழினத்தை எப்படியும் நடத்தலாம் என்ற ஆட்சித் தரப்பின் போக்கு; அதன் பின்னணியாக படைத்தரப்பின் கெடுபிடிகளுமாக ஒரு பெரும் அக்கிரமம் நடந்தேறியது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியுள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்ததன் விளைவாக அவரின் வெற்றி சாத்தியமாயிற்று.
ஆக, இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் ஒற்றுமைப்பட்டால் இலங்கைத் திருநாடு வான்புகழ் பெறும் என்பது உறுதி. இந்நிலைமை தொடர வேண்டும்.
இன்று வள்ளுவர் ஆண்டின் பிறப்பும் தை மகளின் முகிழ்ப்புமான தமிழர் தம் திருநாளில்; நீதியும், நியாயமும், தர்மமும், சமாதானமும் நம் மண்ணில் நிலைபெறட்டும். அதற்காக நாம் எல்லோரும் எங்கள் மனங்களில் ஆத்மிகத்தை, அமைதியை, சாந்தியை நிலைநிறுத்துவோமாக.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 35 வருடங்களாக திருத்தப்படாத வீதி! வவுனியாவில் மூவின மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம்
» இம்முறை கச்சதீவு செல்ல தமிழகத்தில் இருந்து 5,300 பேர் விண்ணப்பம்
» மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum