Top posting users this month
No user |
Similar topics
மகிந்த அரசினால் மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஐக்கியம் ஏற்படுத்த முடியவில்லை: ரணில்
Page 1 of 1

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போதும் இதுவரை மகிந்த அரசினால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை ஒன்றிணைத்து ஐக்கியம் ஏற்படுத்த முடியவில்லை என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று இரவு கல்முனை, சந்தாங்கேனி மைதானத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு ஐ.தே.கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அம்பாறை மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர் அனோமா தயாகமகே மற்றும் அம்பாறை மாவட்ட அனைத்து தொகுதிகளினதும் அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
எனது நண்பன் மகிந்த ராஜபக்ஷ பல வருடங்களாக மக்கள் பணி செய்து களைப்பில் இருப்பதனால் அவரை எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை அமைதியாக இருக்க வைப்பதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் மைத்திரியை போட்டியிட வைத்திருக்கின்றோம்.
மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியதன் உண்மையான நோக்கம் அனைத்து இனங்களும் ஐக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஆனால் இன்று அது நடைபெறாமல் முற்றிலும் மாறுபட்டே சென்று கொண்டிருக்கின்றது.
அவர் இதற்காக வேண்டி எல்.எல்.ஆர்.சீ ஆணைக்குழுவை ஏற்படுத்தி இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதென்று அறிவித்திருந்தார்.
இறுதியில் ஆனது என்ன? யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு இல்லை, இன ஐக்கியம் இல்லை, அவற்றை செய்யாமல் மகிந்த இனத்துவேசத்தினை கக்கி ஆட்சி நடத்தி வருகின்றார்.
இந்த நாட்டிலே இனங்களுக்கிடையே மதவாதத்தினை தூண்டி இனமுறுகல்களை ஏற்படுத்தி வழிபாட்டுத்தலங்களை அழித்து அவர்களுக்கு உரித்தான கலாசாரத்தினையும் அழித்து மதுபானசாலைகளையும், குடு வியாபாரத்தினையும், எதனோல், கசினோ, போன்றவைகளை ஆதரித்து மக்களை மோதவிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்.
இன்று அவரது தந்திரத்தை பயன்படுத்தி தெற்கிலே இனவாதத்தினை தூண்டி தேர்தலில் தான் வெற்றி பெறலாம் என்று கனவு கண்டார்.
ஆனால் நடந்தது என்ன அவருடைய கூட்டனியில் இருந்த பல கட்சிகள் பிரிந்து பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றது.
இவை தவிர தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், எம்முடன் கைகோர்த்து நிற்கின்றது.
தாங்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்வோம். வெற்றி கொண்ட பின்னர் 2005 ஆம் ஆண்டு என்னால் செய்ய முடியாமல் போன அனைத்தையும் 2015ஆம் ஆண்டு நிச்சயம் செய்து தருவேன்.
குறிப்பாக கல்முனையில் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவி புதிய நகரமாக மாற்றியமைப்பேன் வேலையில்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அனைவருக்கும் அதிகூடிய சம்பளத்துடனான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பேன்.
அரச. அரச சார்பற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தினை அதிகரிப்பதோடு வெளிநாட்டு முகவர்களை அழைத்து வந்து பெரியளவிலான தொழிற்சாலைகளை அமைப்போம் எனவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி - ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை: ஜனாதிபதி
» மகிந்த அரசின் ஊழல்களை கண்டறிய பிரதமர் ரணில் தலைமையில் குழு!
» அனைத்து மக்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum