Top posting users this month
No user |
Similar topics
காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி - ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை: ஜனாதிபதி
Page 1 of 1

காவல்துறை சேவையை பக்கச்சார்பற்றதும், சுயாதீனமானதுமான சேவையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அமுலாக்கும் போது, அரசியல் அழுத்தங்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்று அவர் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி நேற்று காவல்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக செயற்படுவதன் மூலம் காவல் துறையினரின் கௌரவம் பேணப்படும். சாதாரண மக்களிடம் காவல்துறையினர் இராணுவத்தை போல நடந்துகொள்ள கூடாது என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்தை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை - ஜனாதிபதி
நாட்டில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த காலம் தேவைப்படுவதாகவும் தாம் ஒரு மாதத்திற்கு முன்னரே பதவியேற்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தனது அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர்பில் அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வாழும் மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையை களைய வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். வடக்கில் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழர்களின் நீண்டகால கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 1000 ஏக்கர் நிலத்தை மீள கையளித்து, அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பில் ராஜதந்திரிகளிடம் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான உத்தேச உள்நாட்டு விசாரணையில் எவரேனும் குற்றம் செய்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்
» மகிந்த அரசினால் மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஐக்கியம் ஏற்படுத்த முடியவில்லை: ரணில்
» மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: முதலமைச்சர்கள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum