Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி தேர்தல் முழு அளவில் ஜனநாயக ரீதியானதல்ல: சர்வதேச கண்காணிப்பாளர்கள்
Page 1 of 1

இலங்கையில் கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முழு அளவில் ஜனநாயக ரீதியானதல்ல என பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்கள் அமைப்பின் தலைவர் டொக்டர் பஹாரத் ஜக்டோ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தேர்தல் ஒன்றின் போது பின்பற்றப்பட வேண்டிய சகல நியதிகளும் விதிகளும் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பின்பற்றப்படவில்லை.
குறிப்பாக தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இந்த நிலைமையை தெளிவாக அவதானிக்க முடிந்தது.
அரச ஊடகங்கள் கடுமையாக ஒரு பக்கச்சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது.
ஆளும் கட்சி வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சொற்ப அளவேனும் பொது வேட்பாளருக்கு அரச ஊடகங்கள் வழங்கவில்லை.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதுடன் கட்சிக் காரியாலயங்கள் தாக்கப்பட்டன.
தோ்தல் பிரச்சாரத்தின் போது மித மிஞ்சிய அளவிற்கு அரச சொத்துக்களும் அரச ஊழியர்களும் ஆளும் கட்சியின் வேட்பாளரின் சார்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் செயன்முறை குறித்து அவதானிக்க சந்தர்ப்பம் கிட்டியது.
தேர்தல் நடைபெற்ற தினத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.
எனினும் அதற்கு முன்னைய காலத்தில் பல்வேறு விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதனை மறுப்பதற்கில்லை.
எனவே இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முழு அளவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஜனநாயக நெறி முறைகளுக்கு அமைவாக நடைபெறவில்லை.
இலங்கைத் தேர்தல்கள் தொடர்பில் சில தினங்களில் அறிக்கை தயாரித்து, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என டொக்டர் ஜக்டோ ஊடகங்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது சர்வதேச சாதனை நிராகரிக்கப்பட்டது!- ஜனாதிபதி
» பிரபாகரன் பேசிய மேடையில் ஜனநாயக போராளிகள் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
» சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum