Top posting users this month
No user |
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பகிரங்க கலந்துரையாடல்!- ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு
Page 1 of 1

20ம் திருத்தம் என்றால் என்ன? இது நமக்கு நன்மையையா, தீமையையா கொண்டு வரப்போகின்றது? என்ற கேள்விகளுக்கு எளிமையான விளக்கங்களை, தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட நகலை தயாரித்த விற்பன்னர்கள் வழங்கவுள்ளார்கள்.
இது தொடர்பான எளிமையான விளக்க உரைகள் அடங்கிய பகிரங்க கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை 16ம் திகதி முற்பகல் 10.15 மணி முதல் பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்துக்கு எதிரில் லோரன்ஸ் வீதி, இலக்கம் 8ல் அமைந்துள்ள ஏவிஎஸ் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக தேர்தல் முறை தொடர்பிலான இந்நிகழ்வை ஜமமு தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தலைமையேற்று நடத்தவுள்ளார்.
தேர்தல் முறை திருத்தச் சட்டமூலத்தை தயாரிப்பதில் முக்கிய பங்களித்து வரும் அசோகா அபேகுணவர்தன, கீர்த்தி தென்னகோன் ஆகியோர் இந்நிகழ்வில் விளக்க உரைகளை நிகழ்த்துவர்.
இந்த உரைகளுக்கு அவசியமான தமிழ் மொழிபெயர்ப்புகளும் வழங்கப்படும். தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஜமமு உட்பட்ட கூட்டணி கட்சிகள் தயாரித்து அளித்துள்ள திருத்த ஆலோசனைகள் பற்றியும் இந்நிகழ்வில் ஆராயப்படவுள்ளது.
சமூக முன்னோடிகள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டு நாடு முழுக்க இன்று பரபரப்பாக பேசப்படும் உத்தேச தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக ஜமமு ஊடக செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum