Top posting users this month
No user |
Similar topics
ஆசிரம பெண்ணின் உடல் தோண்டியெடுப்பு: சிக்குவாரா நித்தியானந்தா?
Page 1 of 1

நித்தியானந்தா ஆசிரமத்தில் இறந்த திருச்சி பெண்ணின் சடலம் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.
திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன், ஜான்சிராணி தம்பதியரின் 3வது மகள் சங்கீதா (24).
பிசிஏ முடித்துவிட்டு கடந்த 4 வருடமாக பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
2014 டிசம்பர் 28ம் திகதி ஆசிரமத்தில் இருந்து சங்கீதாவின் தந்தைக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது சங்கீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூரு புறப்பட்டு சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது, சங்கீதாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
அதன்பின் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் கடந்த 29ம் திகதி திருச்சி கொண்டு வரப்பட்டு மறுநாள் நவலூர் குட்டப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தனது உறவினர் இளையராஜாவுடன் பெங்களூரு சென்ற தாய் ஜான்சிராணி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக அங்கு ராம்நகரில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சந்திரகுப்தாவிடம் புகார் மனு அளித்து கதறி அழுதார்.
புகாரை பெற்றுக்கொண்ட சந்திரகுப்தா, உரிய நடவடிக்கை எடுக்க பிடதி பொலிசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு ஸ்ரீரங்கம் தாசில்தார் காதர்மைதீன், ஆர்ஐ சரவணன், விஏஓ செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள் சரவணன், ரவிக்குமார் ஆகியோர் இடுகாட்டிற்கு சென்றனர்.
வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பிடதி பொலிசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்த உடலை மருத்துவர்கள் இடுகாட்டின் வலதுபுறத்தில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் கொட்டகையில் மறுபிரேத பரிசோதனை செய்தனர்.
உடலில் இருந்து இதயம், சீறுநீரகம் உள்ளிட்ட பாகங்களை ஆய்வுக்காக எடுத்தனர். பின்னர் அவற்றை பாது காப்பான முறையில் சீலிட்டு, பெங்களூரு ஆய்வகத்திற்கு எடுத்து செல்ல பிடதி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மீண்டும் 4 மணிக்கு ஏற்கனவே புதைக்கப்பட்ட குழியில் உடல் புதைக்கப்பட்டது.
உடற்கூறு ஆய்வு அறிக்கைக்கு பின்பு தான் சங்கீதா சாவில் உள்ள மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டோம்: கொந்தளித்த ஆசிரம சிஷ்ஷைகள்: பின்னணி என்ன?
» மர்மமாக மரணமடைந்த நித்தியானந்தா சிஷ்யையின் கடைசி காட்சிகள்
» நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்! புகார் கொடுத்த தந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum