Top posting users this month
No user |
மர்மமாக மரணமடைந்த நித்தியானந்தா சிஷ்யையின் கடைசி காட்சிகள்
Page 1 of 1

பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் திடீரென, மயங்கி சாயும்போது பதிவான சிசிடிவி காட்சிகளை பொலிசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா(24).
பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த 29ம் திகதி சங்கீதா திடீரென இறந்துவிட்டதாக ஆசிரமம் சார்பில் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார், ராம்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே சங்கீதாவின் பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் சாவின் மர்மம் விலகும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் ஆசிரமத்திலுள்ள சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்துள்ளனர்.
அந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில், சங்கீதா உற்சாகத்தோடு நடந்து வந்து ஆசிரமத்தின் வரவேற்பரையில் போடப்பட்டுள்ள இருக்கையில் அமருகிறார்.
உட்கார்ந்த சில நொடிகளிலேயே நாற்காலியில் இருந்தபடியே, அவரது தலை மட்டும் இடதுபுறமாக சரிந்து விழுகிறது.
இதை பார்த்த பெண் சிஷ்யைகள் சிலர், ஓடி வந்து தட்டிப் பார்க்கின்றனர். அப்படியும் சங்கீதாவிடமிருந்து பேச்சு வரவில்லை, மயக்கமுற்றவரை போல காணப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து ஆண் சிஷ்யர்கள் மருத்துவமனையில் பயன்படுத்துவதை போன்ற படுக்கையுடன் கூடிய தள்ளுவண்டியை கொண்டு வருகின்றனர்.
சங்கீதாவை பெண் சிஷ்யைகள், அந்த படுக்கையில் தூக்கி கிடத்துகிறார்கள். அதையடுத்து மருத்துவமனைக்கு சங்கீதா கொண்டு செல்லப்படுகிறார். இவைதான் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
முதலில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் சங்கீதா பிறகு அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
ஆனால் போகும் வழியிலேயே சங்கீதா இறந்து விடுகிறார். ஆனால் திடீரென தலைசரிந்து சங்கீதா விழ காரணம் என்ன என்பது குறித்து தான் மர்மம் நிலவுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum