Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 795 மதுபான போத்தல்களுடன் 4பேர் கைது

Go down

வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 795 மதுபான போத்தல்களுடன் 4பேர் கைது Empty வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 795 மதுபான போத்தல்களுடன் 4பேர் கைது

Post by oviya Wed Jan 07, 2015 1:35 pm

மலையக வாக்காளர்களுக்கு விநியோகிக்க மதுபான போத்தல்களை சட்ட விரோதமாக கொண்டு சென்ற 4 பேர் நேற்று ஹற்றன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹற்றன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படியே விரைந்து சென்று, லொறியை சுற்றிவளைத்து விசாரணை மேற்கொள்ளும் போது இவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு செல்கின்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து லொறியில் பயணித்த நால்வரையும் கைது செய்துள்ளனர். இதில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலையிலிருந்து மஸ்கெலியா, கினிகத்தேனை ஆகிய பகுதிகளுக்கு லொறியில் 795 மதுபான போத்தல்கள் கொண்டு சென்றதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர். இதன் பெறுமதி 8 இலட்சம் ரூபா என ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியையும், 795 போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்த சந்தேக நபர்கள் நால்வரையும் இன்று ஹற்றன் நீதிமான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum