Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: புகார் கொடுத்த அத்தை 16 வயது மகனுடன் கைது

Go down

சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: புகார் கொடுத்த அத்தை 16 வயது மகனுடன் கைது Empty சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: புகார் கொடுத்த அத்தை 16 வயது மகனுடன் கைது

Post by oviya Tue Dec 15, 2015 1:50 pm

சிவகங்கையை சேர்ந்த சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த அத்தை மற்றும் அவரது 16 வயது மகனை சிபிசிஐடி பொலிசார் கைது செய்துள்ளனர்
. சிவகங்கையை சேர்ந்த சிறுமி ஆனந்தியை (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) பல ஆண்டுகளாக அவரது தந்தை, அண்ணன், உறவினர்கள் உள்ளிட்டோர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவரது அத்தை தாமரைச்செல்வி பொலிசில் புகார் செய்தார். இதையடுத்து சிவகங்கை அனைத்து மகளிர் பொலிசார் வழக்கு பதிந்து ஆனந்தியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக்கை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் பொலிஸ் உயரதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வக்கீல் வின்சென்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சிவகங்கை டவுன் பொலிஸ் எஸ்ஐ சங்கர் (55), சுரேஷ்குமார் (32), செந்தில்குமார் (36), அரவிந்த் (25), மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கண்டக்டர் நமச்சிவாயம் (53), சிவகங்கை முத்துராக்கு (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 14ம் திகதி இந்த வழக்கு சிபிசிஐடி பொலிசுக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி பொலிசார் சிவகங்கையை சேர்ந்த கார்த்திகேயன் (32), ராமநாதன் (55) ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் சுமார் 28 பேர் வரை குற்றவாளிகள் என சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் பலாத்காரம் குறித்து, முதன் முதலில் புகார் கொடுத்த கோவையை சேர்ந்த சிறுமியின் அத்தை தாமரைச்செல்வி (36), அவரது மகன் கிஷோர் (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிஷோர் தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதற்கு தாமரைச்செல்வி உடந்தையாக இருந்துள்ளார் என்றும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தாமரைச்செல்வியை சிவகங்கை மகிளா நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் நேற்று மதியம் பொலிசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதியிடம் அவர் கூறுகையில், இவ்வழக்கில் சிக்கியுள்ள பெரிய மனிதர்களை காப்பாற்ற பொலிசார் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் என்னை அடித்து சித்ரவதை செய்தனர் என்று தெரிவித்தார். இதையடுத்து தாமரைச்செல்விக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே வழக்கில் இருந்து பெரிய மனிதர்களை காப்பாற்ற பொலிசார் முயற்சிப்பதாக பரவலாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum