Top posting users this month
No user |
Similar topics
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Page 1 of 1

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூபாலபிள்ளை ஹரன் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யுத்தகளத்தில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது சகஜம்: பிள்ளையான் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வெருகல் படுகொலை தினம் அனுஸ்டிப்பு
» மாகாண சபை உறுப்பினர்கள் நியமன விவகாரம்! ஐ.தே.க. பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
» தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum