Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் வறுவல்
Page 1 of 1
சிக்கன் வறுவல்
தேவையான பொருள்கள்:-
சிக்கன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய் – 3நம்பர்
சோம்பு – 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5நம்பர்
சீரகம் – 2ஸ்பூன்
மிளகு – 2ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1கப்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
தனியா தூள் – 3ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி தழை – 1/2கப் பொடியாக நறுக்கியது
புதினா – 1/4கப் பொடியாக நறுக்கியது
தயிர் – 1/2கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் நன்கு கழுவிய சிக்கன் துண்டுகளை தயிர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
தேங்காய் துருவல், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போடவும். அது நன்கு சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், புதினா ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கிய பின்பு ஊறிய சிக்கனை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அதனுடன் தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு இக்கலவையுடன் அரைத்த மசாலாவையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வேகவிடவும். சிக்கனில் உள்ள மசாலா நன்கு சுருக்கி வர வேண்டும். ஒவ்வொரு சிக்கன் துண்டிலும் மசாலா நன்கு ஒட்டிக்கொள்ளும் வரை நன்கு வறுக்க வேண்டும். வறுத்த பின்பு கீழே இறக்கி கொத்த மல்லி தழையை மேலாக தூவவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
சுவையான சிக்கன் வறுவல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum