Top posting users this month
No user |
Similar topics
சொந்த ஊரிலேயே அகதிகளாக்கி விட்டீர்களே! முன்னாள் முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்
Page 1 of 1

கடலூர் மாவட்டத்தில் நிவாரண உதவி அளிக்க சென்ற ஓ.பன்னீர் செல்வத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், சொந்த ஊரிலேயே இப்படி அகதிகளாக்கி விட்டீர்களே என குற்றம்சாட்டியுள்ளனர்.
தீவிர மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட 9 வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
12 ஆயிரம் குடிசைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளன.
அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் ஓ.பி.எஸ் தலைமையில் 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடும் பாதிப்புக்குள்ளான பெரியகாட்டுப்பாளையம், வீசூர் ஆகிய இரண்டு கிராமங்களை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், சம்பத், உதயகுமார், ஜெயபால் ஆகியோர் பார்வையிட சென்றுள்ளனர்.
அப்போது மக்கள், அங்கு வாழ்வதற்கே பயமாக உள்ளதால் வேறு இடத்தில் வீடு கட்டித்தரவேண்டும் என்று வலியுத்தியுள்ளனர்.
விசூர் செல்லும் வழியில் மேட்டுகுப்பம் மக்கள், அமைச்சர்கள் வந்த காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரிகுப்பம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், எந்த அதிகாரிகளும் எங்களுக்கு எவ்வித நிவாரண உதவியும் செய்யவில்லை என்று கூறி காரின் முன்பு படுத்து கதறி அழுதபோதும் அமைச்சர்கள் யாரும் காரை விட்டு இறங்கவேயில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் அமைச்சர்கள் அனைவரும், விசூர் கிராமத்துக்கு சென்று அங்கு குடிசை வீட்டில் வசித்த ஏழுமலைக்கு ரூ.1,20,000 நிவாரணம் வழங்கியுள்ளனர்.
அப்போது அவர், இந்த பணத்தில் எப்படி வீடு கட்டுவது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியும் அவர் பதில் சொல்லாமல் சென்றுள்ளார்.
மேலும், அங்கு திரண்டிருந்த மக்கள் எங்களை சொந்த ஊரிலேயே அகதிகளாக்கிட்டிங்களே என சரமாரியகாக கேள்வி கேட்டுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் உதவியுடன் அங்கிருந்து அமைச்சர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி
» முதல்வரை காணவில்லையே! புதிய சர்ச்சை கிளம்பியது
» அன்பளிப்பு எனக்கெதற்கு? முதல்வரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பொலிஸார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum