Top posting users this month
No user |
Similar topics
இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதியுதவியா?
Page 1 of 1

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதியுதவி பெறப்பட்டதாக முன்னாள் சிபிஐ அதிகாரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையின் முன்னாள் கமிஷனரும், முன்னாள் சிபிஐ அதிகாரியுமான நீரஜ்குமார் “'Dial D for Don'” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீரஜ்குமார், தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் லஞ்ச ஒழிப்பு குழுவிற்கு தலைமை வகிக்கிறார்.
சிபிஐ.யில் 9 ஆண்டுகள் பணிபுரிந்த போது, விசாரிக்கப்பட்ட முக்கியமான 11 வழக்குகள் குறித்து, தனது புத்தகத்தில் நீரஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை பற்றியும், அப்போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் செல்போனில் நேரடியாக தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு முக்கியமான விஷயம், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் (9/11), சம்பவத்திற்கு இந்தியாவில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.
அமெரிக்க தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி பெயர் முகமது அட்டா. இந்த தீவிரவாதிக்கு, ஒமர் ஷெய்க் என்ற தீவிரவாதி பணம் சப்ளை செய்துள்ளார்.
உமர் ஷெய்க்கிற்கு, சுமார் ரூ.49 லட்சத்தை, கொல்கத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய, அப்டாப் அன்சாரி கொடுத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பார்த பிரதிம் ராய் பர்மன் என்ற தொழிலதிபரை கடத்தி அவரைவிடுதலை செய்வதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதிதான் (ரூ.49 லட்சம்), அன்சாரியால், ஷெய்க்கிற்கு தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum