Top posting users this month
No user |
Similar topics
20 குழந்தைகளை பாம்புகளிடம் இருந்து காப்பாற்றிய பெண்: குவியும் பாராட்டு
Page 1 of 1

சென்னையில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர், பாம்புகளிடம் இருந்து 20 குழந்தைகளை போராடி காப்பாற்றியுள்ளார்.
தாம்பரம் நகராட்சி சேலையூர் 18வது வார்டில் உள்ள திருப்பூர் குமரன் பூங்கா சீரமைக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
பூங்காவின் உள்ளே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 3 முதல் 5 வயது வரையிலான 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
நேற்று அங்கன்வாடி மைய ஊழியர் விசாலாட்சி, சமையல் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, அங்கன்வாடி மைய உள் அறையை திறந்துள்ளார்.
அங்கு, 2 பாம்புகள் சேர்ந்து ஒரு எலியை வேட்டையாட சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பாம்புகளால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று அறையின் கதவை பூட்டிவிட்டு, அங்கிருந்த 20 குழந்தைகளையும் வெளியே அழைத்து வந்துள்ளார்.
வெளியே வந்த பின்னர், அங்கன்வாடி மையத்துக்குள் பாம்புகள் புகுந்துவிட்டது என்று கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அங்கன்வாடி மையத்துக்குள் சென்று பாம்புகளை தேடியபோது அவற்றை காணவில்லை.
எனவே, அங்கிருந்த துளைகளுக்குள் தண்ணீர் குழாயை திறந்து தண்ணீரை பீய்ச்சி அடித்த போது ஒரு துளைக்குள்ளே இருந்து சாரை பாம்பு வெளியே வந்துள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் அந்த பாம்பை அடித்துக் கொன்றுள்ளனர்.
மற்றொரு பாம்பு எங்கு தேடியும் கிடைக்காததால், குழந்தைகளின் பெற்றோர், தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாம்புகளிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி ஊழியர் விசாலாட்சியை மக்கள் பாராட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு
» விவசாயியை மணமுடித்து புரட்சி செய்த பெண் அமைச்சர்: குவியும் பாராட்டு!
» விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவருக்கு அறுசுவை விருந்தளித்த நடிகை ஹேமமாலினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum