Top posting users this month
No user |
Similar topics
ஒட்டக சவாரிக்கு புகழான பாலைவன நகரம் ”பிகனிர்”
Page 1 of 1

இந்தியாவில் பாலைவனத்தை முதன்மையாக நினைவுகூரும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு துடிப்பன இயக்கமுடைய நகரமே இந்த பிகனிர்.
பிகனிர் மாவட்டம் பொன்னிற மணலும் தூசும் காற்றில் கலந்து, சுழன்று வீசும் ஒரு பாலைவான பூமிதான். இந்த நகரை நிர்மாணித்தவர் ராவ் பிகாஜி.
ஜெய்சால்மர் போன்ற ராஜஸ்தானின் மற்ற நகரங்களைவிட சுற்றுலா ஆதிக்கம் குறைந்த நகரம்தான். ஆனாலும், இங்கு விடுதிகள் அதிகம் அதில் பயணிகள் ஆக்கிரமிப்பும் அதிகம், இதற்கு முக்கிய காரணம் ஒட்டக சவாரிதான்.
பிகனிரில் பிரதான சுற்றுலா தலங்கள்:
1. ஜுனகர் கோட்டை (தங்க அரண்மனை),
2.பந்தஸார் ஜெயின் கோவில்,
3. கங்கா அரசு அருங்காட்சியகம்,
4. சலசலக்கும் சந்தை,
5. லெக்ஷ்மிநாத் கோவில்,
6. லால்கார் அரண்மனை,
7. பழைய நகரம் ஆகியவை பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.
ஜுனகர் கோட்டை:
தங்க அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை உயர் ரக கட்டடகலை வடிவமைப்பு கொண்டது. இது ராஜா ராய் சிங்கால் (1589 -1593) க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.
ராஜா ராய் சிங் பிகனிரில் ஆட்சியாளராகவும் முகலாய பேரரசர் அக்பர் காலத்தில் அவர் சாம்ரஜ்யத்தின் ராணுவ உயர் அதிகாரியாகவும் இருந்தார்.
ஜுனகர் கோட்டையை சார்ந்த பல அழகிய கட்டடங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
காண்போரை கவர்ந்திழுக்கும் இந்த கோட்டையை முழுமையான தகவலோடு அறிந்து ரசிக்க வழிகாட்டிகளும் உண்டு. இங்கிலீஷ், பிரஞ்ச், ஜெர்மன், ஹிந்தி போன்ற மொழிகளில் புலமையான வழிகாட்டிகளும் உள்ளனர்.
கரண் மஹால், அனூப் மஹால் சவுக், ஜலி திரை என இன்னும் பல அற்புதமன பகுதிகள் இங்கு பார்க்க பரவசமானது.
பந்தஸார் ஜெயின் கோவில்:
பிகனிர் நகரம் இரண்டு பிரபலமான ஜெயின் கோவிலை கொண்டது. அதில் பந்தஸார் மிகவும் அழகானது. மஞ்சள் கற்களால் செதுக்கி வடிவமைக்கப்பட்டது. அழகிய வேலைப்பாடுகளும் உள்ளே உயிர்ப்பான ஓவியங்களாலும் பிரம்மாண்டத்தாலும் காண்பவர்களை மகிழ்ச்சியால் அதிர்ச்சியடைய செய்கிறது.
லக்ஷ்மி நிவாஸ் அரண்மனை:
இந்த அரண்மனை ஒரு வசிப்பிடமாக மஹாராஜ கங்கா சிங்கால் கட்டப்பட்டது. முன்னாள் பிகனிர் மாநிலத்தின் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. இது பிரிடிஷ் கட்டடகலை நிபுணர் சமுவேல் ஸ்விண்டன் ஜாக்கப் என்பவரால் 19902 ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
இது இந்தோ- செரசோனிக் கட்டட கலை பாணியில் உருவாக்கப்பட்டது. தற்போது பாரம்பரிய ஹோட்டலாகவும் ஒருபுறம் பிகனிர் சமஸ்தான குடும்பத்தினர் வசிப்பிடமாகவும் விளங்குகிறது.
கார்னி மாதா கோவில்:
இது ஒரு துர்கா தேவியின் கோவில். இது பிகினிர் நகரிலிருந்து தெற்கே 30 கி.மீ. தூரத்தில் தெஷ்னோக் நகரில் அமைந்துள்ளது.
பிகனிர் நகரில் ஒய்யாரமான மனற்குன்றுகள் கூட ரசனைக்குரிய இயற்கை அழகுதான். இங்கு பெரும்பாலான மக்களால் மார்வாரி மொழி பேசப்பட்டாலும் அலுவலக மொழியாக ஆங்கிலமும், ஹிந்தியும் விளங்குகிறது.
ராஜஸ்தானில் தலைசிறந்த நகரங்களில் ஐந்தாவது இடத்தில் பிகனிர் உள்ளது. இது தலைநகர் ஜெய்பூரிலிருந்து 330 கி.மீ. தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ளது.
இங்கு செல்ல ரயில், பஸ், ஆட்டோரிக்ஷா என சகல வசதிகளும் உண்டு. எத்தனை சுற்றுலாதலங்களுக்கு சென்றாலும் ஒரு பாலைவன நகரத்திற்கு செல்வது தனிரசமான பரவசமே.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum