Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு”

Go down

வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு” Empty வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு”

Post by oviya Fri Sep 11, 2015 3:18 pm

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில், ஹசனா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தான் பெளூரு(Belur).
இது சிறிய தாலுகா ஆனாலும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

பெங்களூரிலிருந்து 222 கி.மீ. தூரத்திலும், மைசூரிலிருந்து 149 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பெளூருவில் சென்னகேசவா கோவில் மிகவும் பிரபலமானது.



சென்னகேசவா கோவில் (Chennakesava Temple)

ஹோய்சாலா விஷ்ணுவர்தன் (Hoysala Empire ) என்ற பேரரசரால் 1116 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தகோவில் 37 மீட்டர் உயரம் உடையது. ஒரு விசாலமான மேடையின் மீது கட்டப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் ஹோய்சாலாவின் கலையுணர்வுக்கும், அந்த காலகட்டத்தில் வாழ்ந்த தொழில்நுட்ப கலைஞர்களின் வேலைப்பாட்டிற்கும் முதன்மை எடுத்துக்காட்டாக உள்ளது.

இக்கோயிலின் நுழைவாயிலாக உள்ள ராஜகோபுரம், கூடுதலாக திராவிடர்கள் பாணியில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

சென்னகேசவர் சந்நிதி, கருடாழ்வார் சிலை, கோவில் சுவர்கள் ஈடில்லா கலைநயம் கொண்டது. ஆடல் மகளிர் சிற்பங்கள் பல்வேறு நிலைகளில் நேர்த்தியோடு செதுக்கப்பட்டவை.



கப்பே சென்னிகா ஆண்டாள், சவுமியா நாயகி ஆகியோரின் சந்நிதிகளும் இங்கு புகழானது.

சிலைகளும், யானை, குதிரை போன்ற விலங்குகளின் சிற்பங்களும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இந்த கோவிலை காண பக்தர்கள் வருகின்றனர்.



ஹலிபிடு(Halebidu)

இந்த கோவில் பெளூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஹலிபிடு ஹோய்சாலோவின் ஆட்சி தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. இக்கோவிலும் பெளூருவில் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகும்.

ஹலிபிடு இதற்கு முன்னாள் துவாரசமுத்ரா என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இது ஹோய் சலேஸ்வரா கட்டிய சிறந்த கோவில்களில் ஒன்று,

இது ஒரு இரட்டை சிவன்கோவில், ஒரே மேடையில் இரண்டு கற்பகிரகங்கள் உள்ளன.

ஒன்று விஷ்ணுவர்தனா ஹோலிசலேஸ்வரா லிங்கம், மற்றொன்று சந்தலீஸ்வரா லிங்கம். ஹோலிசலேஸ்வரர் கர்ப்பகிரகத்துக்கு முன்னால் நந்தி மண்டபம் உள்ளது.

அதற்கு பின்னால், சூரிய கடவுளின் 2 மீட்டர் உயரமுள்ள சிலை சந்நிதியும் உள்ளது.

இது விஷ்ணுவர்தன் தளபதிகளில் ஒருவரான கெட்டமல்லா என்பவரால் 1121 ல் துவக்கப்பட்டது.

இங்கு மகாபாரதா, ராமாயணா, பாகவதா காட்சிகள், தகவல்கள் குறிப்புகளாக வடிக்கப்பட்டுள்ளன.



ஹலிபிடு கர்நாடகாவின் சுற்றுலாதலங்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இங்கு உள்ள கோமதீஸ்வரா சிலை, ஆசியாவிலே மிக உயரமான ஒட்டுக்கல் சிலையாகும். இது 18 மீட்டர் உயரமுடையது.

ஸ்ரவணபெலகோலா (Shravanabelagola) ஜெயின் மதத்தினரின் புனித மையமாக திகழ்கிறது.

ஹலிபிடுவில் உள்ள ஹாய்சலேஸ்வர லிங்க கோவிலும், அதனோடு சேர்ந்த ஸ்ரவண்பெலகோலாவில் உள்ள ஜைன நினைவுச் சின்னங்களும் உலகின் பாரம்பரிய பகுதிகளாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெளூருக்கு சென்று வந்தால் நல்ல ஒரு வரலாற்று நினைவுகளோடு திருப்தியோடு திரும்பலாம் என்பது உறுதி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum