Top posting users this month
No user |
Similar topics
பாரம்பரியத்தை பறைசாற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
Page 1 of 1

இராஜேந்திர சோழன், தஞ்சை பெரிய கோவிலைக்கட்டிய ராஜராஜ சோழனின் மகனாவார் தனது தந்தை கட்டிய கோவில் போலவே மிகப்பிரம்மாண்டமாக இக்கோவிலை எழுப்பியிருக்கிறார். பல நாடுகளை வென்ற வெற்றியின் நினைவாக இக்கோவிலை எழுப்பியிருக்கிறார் ராஜேந்திர சோழன்.
ஸ்தலவரலாறு:
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேசியா, சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான் மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்;
அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய பிரகதீஸ்வரர் கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயிலும் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது ஆகும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் இன்றளவும் பழமை மாறாமல் உள்ளது.
ராஜேந்திர சோழனால் கலை நயத்துடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 62 அடி, உயரம் 13½ அடி ஆகும் இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு.
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இதுதான் என கூறப்படுகிறது. இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது.
இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் சிற்ப வல்லுனர்கள்.
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்ன வென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும் இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள்.
இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை. பெரிய நாயகி அம்மன் பெயருக்கு ஏற்றது போல் 95 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் காட்சிதருகிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
அதன் பிறகு தான் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள் இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம் 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது. கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான் கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.
இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு அணிவிப்பதற்க்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். செல்லும் வழி: கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் இக்கோவில் 35கிமீ தொலைவில் உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கங்கை கொண்ட சோழன் - சரித்திர நாவல்
» வரலாற்றை பறைசாற்றும் பஞ்சாப் கோட்டைகள்
» வால்காவிலிருந்து கங்கை வரை
» வரலாற்றை பறைசாற்றும் பஞ்சாப் கோட்டைகள்
» வால்காவிலிருந்து கங்கை வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum