Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தாக்கிய இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்
Page 1 of 1

சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில், ஆங்கில ஏடு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் கலந்து கொண்டுள்ளார்.
'இந்தியாவில் இலங்கை தமிழர்களின் எதிர்காலம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்க நிகழ்ச்சி நடந்துள்ளது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசியுள்ளார்.
மேலும், அவர் அருகில் சென்று இலங்கை படுகொலைக்கு காரணமே நீதான் என கூறியபடியே, அவரது தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் எம்.கே.நாராயணன் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாக்குதலில் ஈடுபட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் (33) என்று தெரியவந்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், தாம் எந்த அரசியல் கட்சியையோ அல்லது இயக்கத்தையோ சேர்ந்தவரல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர் என்பதும் பிரபாகரனின் தந்தை மெய்யப்பன், இலங்கை மலையகப் பகுதியில் வசித்து வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற இந்திய வம்சாவளி நபர்
» இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மோடி கவனம் செலுத்துகிறார்: பாரதீய ஜனதா கட்சி
» இலங்கைத் தமிழர்களின் சமவுரிமைக்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum