Top posting users this month
No user |
Similar topics
தேசிய விருதினை திருப்பி அளித்த எழுத்தாளர் அருந்ததி ராய்
Page 1 of 1

புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், தனது தேசிய விருதை திருப்பி அளித்துள்ளார்.
1989ம் ஆண்டு ”In Which Annie Gives it Those Ones." என்ற படத்தில் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அருந்ததி ராய்க்கு கிடைத்தது.
இந்நிலையில் அருந்ததி ராய் தனது தேசிய விருதை திருப்பி அளித்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறுகையில், முதலில் நமது திறமைகள் விருதுகளை வைத்து அளவிடப்படுவதில்லை.
நம் நாட்டில் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர், எரிக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர்.
நாட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக இதுவரை இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கெல்லாம் மத சகிப்புத்தன்மை என்ற வார்த்தையை எளிதாக காரணம் காட்டுகின்றனர். இத்தகைய வார்த்தையை பயன்படுத்துவதே முதலில் தவறு.
நாட்டில் பல்லாயிரக்கணக்கான தலித்துகள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒரு வித பீதியில்தான் இருக்கின்றனர்.
எப்போது தாங்கள் தாக்கப்படுவோமோ? என்ற அச்சத்தில் இந்த மக்கள் உறைந்து போய் உள்ளனர்.
தற்போது நாட்டில் குண்டர்கள் கையெடுக்கும் விவகாரமாக மாட்டிறைச்சி ஆகி விட்டது.
மாடு எப்படி கொல்லப்படுகிறதோ அதுபோலவே இவர்கள் மனிதர்களையும் கொல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதே தனது ”சாகித்ய அகாடெமி” விருதினை திருப்பியளித்துவிட்டேன்.
எனவே, இதனை காங்கிரஸ்-பாஜக மோதலாக விவாத பொருளாக ஆக்கவேண்டாம். தற்போது நடக்கும் செயல்கள் அதையும் தாண்டி சென்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இவர் 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' நாவலுக்கு புக்கர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நானும் திக்விஜய்சிங்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்: அம்ரிதா ராய்
» தென்னாப்பிரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர்: மனநல மருத்துவமனையில் அனுமதி
» சவேந்திர சில்வா உட்பட 57 தூதுவர்கள் திருப்பி அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum