Top posting users this month
No user |
Similar topics
எழுத்தாளர் கல்புர்கி கொலை: ”சாகித்ய அகாடமி” விருதை திருப்பியளித்த 17 வயது இளம்பெண்
Page 1 of 1

17 வயது இளம் கன்னட எழுத்தாளர் ரியா விதாஷா தனது ”சாகித்ய அகாடமி” விருதை திருப்பியளித்துள்ளார்.
கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டு, இன்று வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 11ம் வகுப்பு படிக்கும் ரியா விதாஷா இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுவரை 5 நாவல்களை இயற்றியுள்ள இவர், ”முத்து தீர்த்தஹல்லி” எனும் புனை பெயரில் எழுதி வருகிறார்.
ரியா விதாஷா இதுபற்றி கூறுகையில், எழுத்தாளர் கல்புர்கியை, என் குழந்தை பருவத்தில் இருந்து எனக்கு தெரியும்.
அவருடைய அனைத்து படைப்புகளையும் நான் வாசித்துள்ளேன். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது நான் கதறி அழுதேன்.
அப்போதே என் விருதினை திருப்பி அளிக்க முடிவெடுத்தேன். ஆனால் என் பெற்றோர்தான் என்னை சமாதானப்படுத்தினர்.
இத்தனை நாட்கள் கடந்தும், குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இருப்பதால் தான், என் விருதை திருப்பி அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும், ரியா விதாஷா எழுதிய 'காதா ஹாதியா ஹூகாலு' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் பல விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாத்ரி இஸ்லாமியர் கொலை தொடர்பான விடயத்தில் மோடியின் மவுனத்தை எதிர்த்தும், எழுத்தாளர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், நாட்டில் சகிப்புத்தன்மையற்ற நிலை நிலவுவதாலும் பல்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பியளித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் மவுனத்தால் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்கும் நேருவின் உறவினர்
» இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து எரித்து கொலை
» தம்பி, தங்கையை நல்லா பாத்துக்குங்க அப்பா: கௌரவ கொலை செய்த தந்தையிடம் கெஞ்சிய இளம்பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum