Top posting users this month
No user |
Similar topics
நானும் திக்விஜய்சிங்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்: அம்ரிதா ராய்
Page 1 of 1

அம்ரிதா ராய் தனது பேஸ்புக் பக்கத்தில், தானும் திக்விஜய் சிங்கும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அதனை பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்ரிதா ராய் இது தொடர்பாக தனது பெஸ்பு பக்கத்தில், நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம்.
இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, மன அழுத்தத்தைத் தருவதாக அமைந்திருந்தது.
சைபர் குற்றத்திற்கு நான் பலி கொடுக்கப்பட்டேன். ஆனால் என்னை ஒரு கிரிமினல் போலவே பலர் பார்த்தனர், பேசினர், நடத்தினர்.
என்னைக் கேலி செய்யாதவர்களே இல்லை. பலவிதமான ஆபாச வார்த்தைகளால் என்னைத் தூற்றினர். ஆனால் எந்தத் தவறும் செய்யாதவள் நான்.
காதல் மீதும், மரியாதை மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை சமூக வலைதளம் மூலம் தூற்றி மகிழ்ந்தனர்.
இந்த காலகட்டத்தில் என் மீதும், திக்விஜய் சிங் மீது நான் வைத்திருந்த காதல் மீதும் நம்பிக்கை வைத்து நான் எனது வேலையைப் பார்த்து வந்தேன்.
எங்களுக்குள் உள்ள வயது வித்தியாசம் குறித்தே அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை முடிவு செய்யும் அறிவும், தெளிவும் எனது வயதுக்கு உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நாகரீகமடைந்த, முற்போக்கு இந்தியாவில். நமது சட்டம், அரசியல் சாசனம் ஆகியவை எனது வாழ்க்கை, எனது வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை நானே முடிவு செய்யும் சுதந்திரத்தையும், உரிமையையும் எனக்குக் கொடுத்துள்ளது.
எனது முடிவுக்கு உள்நோக்கங்கள் இருக்கலாம் என்றும் சிலர் என்னைக் குற்றம் சாட்டலாம். காலம்தான் இதுபோன்ற விமர்சனங்களுக்கு தீர்ப்பளிக்க முடியும்.
திக்விஜய் சிங் மீது வைத்த காதலால் அவரை திருமணம் செய்துள்ளேன். அவரது சொத்துக்களுக்காக நான் அவரை மணக்கவில்லை.
அவரது சொத்துக்கள் அனைத்தையும், அவரது மகன், மகள்களுக்கு மாற்றி விடுமாறு அவருக்கு ஏற்கனவே கூறி விட்டேன். வேண்டுகோளும் விடுத்துள்ளேன்.
அவருடனான எனது பயணத்தை சந்தோஷமாக ஆரம்பித்துள்ளேன். அதில் அவர் மட்டும் என்னுடன் வந்தால் போதும்.
எனது நண்பர்கள், எனது அலுவலக சகாக்கள், நலம்விரும்பிகள் ஆகியோருக்கு, அவர்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்
» இந்திய முறைப்படி திருமணம் புரிந்த சீன காதல் ஜோடி! வண்ணமயமாக கொண்டாடப்பட்ட ஹோலி
» திருமணம் செய்து வைக்கவில்லை: கோபத்தில் தந்தையை கொன்ற மகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum