Top posting users this month
No user |
Similar topics
சவுதி பொலிசார் கூறுவதை ஏற்க முடியாது..இதில் மர்மம் இருக்கிறது: கை துண்டிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
Page 1 of 1

எனது தாயார் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது என சவுதியில் பணிப்பெண்ணாக வேலைக்கு சென்ற, கை துண்டிக்கப்பட்ட பெண்ணின் மகன் பேட்டியளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முனிரத்தினத்தின் மனைவி கஸ்தூரி (வயது 55), கடந்த சில மாதங்களுக்கு முன், சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் பணிப்பெண்ணாக வேலைக்கு சென்றுள்ளார்.
தற்போது கை துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கையை வீட்டு உரிமையாளர் தான் வெட்டியதாக கஸ்தூரியின் குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கஸ்தூரி மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால், வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக தப்பிஓட முயற்சித்த போது தவறி விழந்ததில் தான் கை துண்டானதாக வீட்டின் உரிமையாளரும், ரியாத் பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கஸ்தூரியின் மகன் மோகன் சவுதி பொலிசாரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மோகன் கூறுகையில், எனது தாயார் கை துண்டிக்கப்பட்டது குறித்து சவுதி அரேபியா பொலிசார் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நலமாக இருந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர்.
ஆனால் சவுதி பொலிசார் கூறுவதுபோல் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், எப்படி எனது தாயாருக்கு சவுதி அரேபியா செல்ல அவர்கள் விசா கொடுத்திருப்பார்கள்.
மேலும் கீழே விழுந்ததால்தான் கை துண்டிக்கப்பட்டது என்று எந்த நிபுணராவது ஒத்துக்கொள்வார்களா?
எனவே சவுதி பொலிசார் கூறுவது முற்றிலும் தவறானது என்றும், எனது தாயாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பிய திருவண்ணாமலையை சேர்ந்த தரகரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் வசிக்கும் கஸ்தூரியின் சகோதரி விஜயகுமாரி கூறுகையில், இதில் ஏதோ மர்மம் உள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா
» தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே
» தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை ஏற்க முடியாது! மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum