Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை குழம்பு
Page 1 of 1
வெந்தயக்கீரை குழம்பு
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை. – ஒரு கட்டு
சின்ன வெங்காயம்.– கால் கப்
பூண்டு. – 4 பல்
தக்காளி. –2
புளி. – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்.– கால் டீஸ்பூன்
கடுகு. – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு. – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள். – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் .– 1 டீஸ்பூன்
சீரகம். – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன்
கறிவேப்பிலை. – சிறிதளவு
எண் ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உப்பு. – தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சாம்பார் பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, மூடி மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான வெந்தயக்கீரைக் குழம்பு தயார். இதை சாதத்தில் சேர்த்து பரிமாறலாம்.
மருத்துவக் குணங்கள்:
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது.
சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum