Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை மீன் குழம்பு
Page 1 of 1
வெந்தயக்கீரை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மீன் : அரை கிலோ
வெந்தயக்கீரை : 3 கட்டு
வெங்காயம் : 100 கிராம்
தக்காளி : 100 கிராம்
புளி : 50 கிராம்
பச்சைமிளகாய் : 4
தேங்காய் : அரை மூடி
பூண்டு : 8 பற்கள்
கடுகு : அரை டீஸ்பூன்
வெந்தயம் : கால் டீஸ்பூன்
சீரகம் : அரை டீஸ்பூன்
மிளகு : 10
மிளகாய்த்தூள் : 5 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்
வெந்தயக்கீரை உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி தரும். இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மை தெரியாமல் குழம்பு சுவையாக இருக்கும்
மீனை நன்கு கழுவி சுத்தப்படுத்தவும். தேவையான துண்டுகளாக நறுக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து அதில் ஒரு தக்காளி பழத்தைப் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டிரண்டாக வகுந்து கொள்ளவும்.
வெந்தயக் கீரையை சுத்தமாக கழுவி நறுக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் மிளகு சீரகம் போட்டு வெடிக்கையில், பச்சை மிளகாய் வெங்காயம் கருவேப்பிலையை சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து கிளறி கீரை சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும், புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேங்காயைத் துருவி பாலெடுத்து சேர்க்கவும்.
நன்கு கொதித்து வருகையில், மீன் துண்டுகளைப் போட்டு நிதானமாக தீயில் வேக வைக்கவும். மீன் வெந்து குழம்பு கெட்டிப்பட்டதும் இறக்கவும்.
சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மீன் குழம்பு ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum