Top posting users this month
No user |
Similar topics
சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பக்டீரியாவுக்கு அப்துல் கலாமின் பெயர்
Page 1 of 1

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ”நாசா”, சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடித்துள்ள புதிய வகை பக்டீரியாவிற்கு அப்துல் கலாமின் பெயரை வைத்து கவுரவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பக்டீரியாவை கண்டுபிடித்த குழுவிற்கு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமை வகித்துள்ளார்.
கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறுகையில், வேற்று கிரகங்களில் வாழும் உயிரினிங்களை கண்டுபிடிப்பதே எனது குழுவின் முக்கிய நோக்கம் ஆகும்.
பொதுவாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்படும் பக்டீரியாக்கள், அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்து கொண்டு உயிருடன் வாழ்ந்து வருகிறது என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து வந்தோம்.
இந்நிலையில் நாங்கள் இதுவரையில் கண்டிராத புதுவகை பக்டீரியா ஒன்றினை கண்டுபிடித்தோம்.
அந்த புதுவகை பக்டீரியா பலவித கதிரியக்கங்களையும் தாங்கும் சக்தி படைத்ததாக விளங்கியது.
எனவே அந்த பக்டீரியாவில் உள்ள மூலக்கூறுகளின் மூலம், பூமியில் வாழும் நமக்கு தோன்றும் தோல் புற்று நோய் போன்றவற்றை சரி செய்ய முடியுமா என்று சோதனை செய்யலாம்.
இதுவரை நான் சுமார் 25 பக்டீரியாக்களுக்கு பெயர் வைத்துள்ளேன், எந்த இடத்தில் இருந்து அந்த பக்டீரியா பெறப்பட்டதோ அதை தொடர்பு படுத்தி பெயர் வைப்பது தான் வழக்கம்.
மேலும் எனது ஆசிரியர்களின் பெயரையும் நான் சில பக்டீரியாக்களுக்கு சூட்டியுள்ளேன்.
எனக்கு அப்துல் கலாம் மீது தனிப்பட்ட மரியாதையும், ஆச்சர்யமும் இருந்தது.
அவர் இந்த வருடம் நம்மை விட்டு பிரிந்த நிலையில் இதுதான் அவர் பெயரை வைப்பதற்கான நேரம் என தோன்றியதால் நான் நாசாவிற்கு பரிந்துரை செய்தேன்.
நானும் தமிழன் என்பதால் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கலாம் என பெயர் வைக்க வேண்டுமென்று என்னுடன் பணியாற்றியவர்களிடமும் அனுமதி பெற்றேன்.
இதையடுத்து நாசாவும் அவரது பெயரை வைத்து கவுரவபடுத்தலாம் என ஒப்புதல் அளித்ததால் ”soilibacilus-kalami” என அந்த பக்டீரியாவுக்கு பெயர் சூட்டப்பட்டது.
இதுபற்றிய அதிகார்வப்பூர்வ அறிவிப்பு இன்னும் 6 மாதங்களில் அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிவிண்ணில் செலுத்தப்படும் சர்வதேச செயற்கைக் கோளுக்கு அப்துல் கலாமின் பெயர்: ஐ.நா. சபை
» ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி தாக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு: குற்றவாளி பிடிபடவில்லை
» கனவு நாயகன் அப்துல் கலாமின் நிறைவேறாத கனவுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum