Top posting users this month
No user |
Similar topics
தாய்நாட்டுக்கு உயிருடன் திரும்ப வேண்டும்: கொத்தடிமையாக சிக்கி தவிக்கும் தமிழரின் உருக்கமான மெசெஜ்
Page 1 of 1

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கியுள்ள 27 தமிழர்கள், தங்களை மீட்க வேண்டுமென்று இந்தியாவில் உள்ள தங்கள் உறவினருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் உதவி கேட்டுள்ளனர்.
மலேசியாவில் உள்ள அலோர் செடார் நகரில், ஸ்மார்ட் கய்ஸ் ஹேர் என்ற சலூனை குமார் என்ற தமிழர் நடத்தி வருகிறார்.
குமாரின் சலூனுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் வேலைக்கு சென்றுள்ளனர்.
ஒப்பந்தத்தில், முடிதிருத்தும் பணி மட்டும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், பூக்கடை, இளநீர் கடை என பணியாளர்களை வேலைக்கு அனுப்பியதோடு நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தான், அங்கு பாதிக்கப்பட்ட ஒருவர் தனது உறவினருக்கு ”வாட்ஸ அப்” மூலம், குரல் பதிவு வடிவில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில், தினமும் 14 மணி நேரம் வேலை கொடுத்து கொத்தடிமைகளை போல் வேலை வாங்குகின்றனர். 2 வருடம் பணி பர்மிட் என்று சொல்லி 3, 4 வருடம் இருக்க வைக்கின்றனர்.
நாங்கள், ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.80,000 தருமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
எங்களை அடித்து காயப்படுத்துவதோடு, திருட்டுப் பழி சுமத்தி பொலிசில் மாட்டிவிடுவோம் என்றும் மிரட்டி அச்சுறுத்துகின்றனர்.
நாங்கள் எங்கள் சொந்த நாட்டுக்கு உயிருடன் திரும்பிச்செல்ல உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், இவர்களில் 20 பேர் தப்பிச் சென்று, இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்து, தூதரக அதிகாரிகள் உதவியை நாடியுள்ளனர்.
ஆனால் தூதரக அதிகாரிகள் இவர்களிடம், நாங்கள் விசாரிக்கிறோம். அதுவரை, நீங்கள் வேறு எங்காவது தங்கிகொள்ளுங்கள் எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளனர்.
கடை உரிமையாளர் குமாரிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், 2 வருடம் வரை பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பது வழக்கம்.
மற்றவர்கள் அவர்களாகவே டிக்கெட் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அதுவும் 15 நாள் கழித்துதான் முடிவாகும் என குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளர் பட்டுக்கோட்டை ஏ.பிரபாகரன் கூறுகையில், இந்தத் தகவல் தெரிந்தவுடன், மலேசியாவில் தவித்த தமிழக இளைஞர்களை, அங்குள்ள எங்களது உறுப்பினர்களே தங்கள் அறைகளில் தங்க வைத்துள்ளனர்.
மேலும், இந்திய தூதரகத்திடம் பேசி, அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவுஸ்திரேலியாவில் தனயனை இழந்து தவிக்கும் தம்பியின் உருக்கமான வேண்டுகோள்!
» புலம்பெயர் மக்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும்: சம்பந்தன்
» என் மனைவியை கொன்றவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: கணவர் உருக்கமான பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum