Top posting users this month
No user |
Similar topics
திடீரென காற்றில் மறையும் மனிதர்கள்...அமானுஷ்யத்தின் தலைநகரம்!
Page 1 of 1

உலகில் கடவுளை நம்பாதவர்கள் கூட பேய், பில்லி சூனியம் என்றால் பயந்து நடுங்கி விடுவார்கள், அந்தளவு அமானுஷ்ய நம்பிக்கைகள் மக்களுடன் இணைந்த ஒன்று.
அவ்வாறாக மாந்திரீகத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு இடம் தான் மயோங்.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான ஆசாமில் உள்ள மாவட்டம் மோரிகான்.
இயற்கை அழகுகள் சூழ பிரம்மபுத்திரா நதிகரையின் மீது அமைந்துள்ள இந்த மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் தான் மயோங்.
கடந்த பல ஆண்டுகளாகவே மாந்திரீகம் மற்றும் சூனியத்துக்கு பெயர் போனதாக விளங்கி வருகிறது இந்த கிராமம்.
மயோங் என்று இந்த கிராமத்துக்கு பெயர் வந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இது சமஸ்கிருத வார்த்தையான மாயா என்பதில் இருந்து வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.
மேலும் சிலர் திம்மசா மொழியில் மயோங் என்றால் யானை என்றும் கூறுகின்றனர்.
இந்த பகுதியை பற்றி மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் சில இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் உண்மையான பெயர் காரணத்தை யாரும் அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது.
இந்த ஊரின் பெயர் காரணத்தை போன்று இந்த ஊரில் மாந்திரீகம் எப்போது தொடங்கியது என்பதும் யாரும் அறிந்திராத ஒன்று.
எனினும் காற்றில் மறையும் மனிதர்கள், மனிதர்களை மிருகமாக மாற்றுவது, மிருகங்களை மாய சக்தி மூலமாக கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏராளமான விந்தைகள் இப்பகுதிகளில் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
பல தலைமுறைகளை கடந்து தற்போதும் இந்த கிராமத்தின் ஒரு சில இடங்களில் மாந்திரீகம், சூனியம் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் அகோம் சாம்ராஜ்யத்தின் ஆட்சிகாலத்தின் போது இந்த இடங்களில் நரபலி போன்றவைகள் நடைபெற்றதற்கான தடயங்களும் ஆங்காங்கே கைப்பற்றப்பற்றுள்ளது.
இது தொடர்பான ஆயுதங்கள், தடயங்கள் போன்றவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயற்கை அழகை ரசிப்பதற்கு மட்டுமல்லாமல், பில்லி சூனியம், மாந்திரீகம் செய்வதற்கும் ஏராளமானோர் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய புயல் வர வாய்ப்பில்லை! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகரம்
» திடீரென "எஸ்கேப்" ஆன ஸ்டாலின்: ஏக்கத்தில் தவிக்கும் கருணாநிதி
» மும்பை குற்றத் தலைநகரம்
» திடீரென "எஸ்கேப்" ஆன ஸ்டாலின்: ஏக்கத்தில் தவிக்கும் கருணாநிதி
» மும்பை குற்றத் தலைநகரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum