Top posting users this month
No user |
Similar topics
ஆட்சியை விட்டு துறவியான பாகுபலி: வரலாற்று தலம்
Page 1 of 1

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய ஒட்டு சிலையான பாகுபலி சிலை கர்நாடக மாநிலத்தின் வரலாற்று பாரம்பரியமான சுற்றுலா தளங்களில் முக்கியமானது.
ஜெயின் (சமண) பக்தர்களின் புனித யாத்திரைக்கு பயனாகும் ஜெயின் துறவியான ஷ்ரவணபெலகோலாவின் சிலை, கடவுள் கோமதீஸ்வரா என்றே அழைக்கப்படுகிறது.
இதற்கு மகாமஸ்டேக அபிஷேகா திருவிழா 12 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. 20 நாட்களாக நீடிக்கும் இந்த விழாவிற்கு உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த திருவிழாவின் போது கடவுள் கோமதீஸ்வரா (பாகுபலி) சிலைக்கு 1008 கலசங்களில் (வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள்) தண்ணீர், பால், தேங்காய், வெண்ணெய், வாழைப்பழம், குங்குமம், வெல்லம், சந்தனம் முதலிய பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த பிரம்மாண்டமான சிலை கி.பி. 983 ல் சமுந்தரேய என்பவரால் உருவாக்கப்பட்டு, கங்கை அரசின் ரட்சமாத்தா என்ற அமைச்சர் காலத்தில் நிறுவப்பட்டது.
இது இந்திரகிரி மலை மீது, 17 மீட்டர் (57 அடிகள்) உயரத்தில் உள்ளது.
இது ஜெயின் மதத்தின் ஆன்மீக மையங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
கர்நாடகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி செலுத்திய மௌரிய வம்சத்தை தோற்றுவித்தவர் ஷ்ரவணபெலகோலா.
இவர் வரலாற்றில் சந்திரகுப்தா என்ற பெயரில் விளங்குகிறார். தனது ஆன்மீக நாட்டத்தால் சிம்மாசனத்தை கைவிட்டுவிட்டு துறவியானவர்.
சந்திரகுப்தா தனது இறுதி மூச்சை விட்ட இடமே சந்திரகிரி என்று அழைக்கப்படுகிறது.
பாகுபலி என்றால் புஜபல பராக்கிரமம் கொண்டவர் என்று பொருள். இவர் ஜெயின் மதத்தின் முதல் தீர்த்தங்கராவும் அதை தோற்றுவித்தவருமான ரிஷபா என்பவரின் இளைய மகனாவார்.
பாகுபலிக்கு தனது மூத்த சகோதரனான பரதாவோடு ஏற்பட்ட அரசர் பதவிக்கான போட்டியில் போர் ஏற்படும் சூழ்நிலை அமைந்தது.
அதனால், சகோதரர்களுக்குள் ஒருவரை ஒருவர் கொல்ல நேரிடும் என்பதாலும் படைவீரர்கள் பெருமளவில் பலியாக நேரிடும் என்பதாலும் அந்த அரச வம்சத்தின் அமைச்சர், இருவருக்கும் ஆயுதமில்லாத போட்டி வைக்கும் வேண்டுகோளை வெளியிட்டார்.
சகோதரர்களான பாகுபலியும் பரதாவும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி கண் யுத்தம், ஜல யுத்தம், மல்யுத்தம் மூன்றும் நடத்தப்பட்டது. மூன்றிலும் பாகுபலியே வெற்றி பெற்றார் ஆட்சிக்கு உரியவரும் ஆனார்.
மக்களால் பெரிதும் கவரப்பட்ட அவர். பிறகு ஆட்சியை கைவிட்டு ஜெயின் துறவியானர். அதனால், ஜெயின் மதத்தினரால் வரவேற்கப்பட்டு புனித ஆன்மீக வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
2007 ஆகஸ்ட் 5 ல் நடத்திய வாக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள சிறந்த 7 சுற்றுலாதளங்களில் பாகுபலியும் ஒன்று அதோடு, 49 சதவீத வாக்குகளை இந்த இடமே பெற்றிருப்பது இதன் சிறப்புக்கு கிடைத்த மக்கள் அங்கீகாரமே.
இந்த பாகுபலி கோவில் ஹஸ்ஸன் மாவட்டத்தில் உள்ளது. இது மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 52 கி.மீ. தூரத்தில் உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனிதனின் காலடி பட வேண்டிய அழகிய சுற்றுலா தலம்
» திருமூலர் தீட்சை பெற்ற தலம்!
» வரலாற்று நோக்கில் புராணம்
» திருமூலர் தீட்சை பெற்ற தலம்!
» வரலாற்று நோக்கில் புராணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum