Top posting users this month
No user |
Similar topics
திருமூலர் தீட்சை பெற்ற தலம்!
Page 1 of 1
திருமூலர் தீட்சை பெற்ற தலம்!
திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கு சிவனின் திருவடி தீட்சை ஆவுடையார்கோவிலில் கிடைத்தது 8ம் நூற்றாண்டில் நடந்த கதை. திருமூலரின் காலம் மிகவும் முந்தையது. அவருக்கு சிவன் தீட்சை அளித்த தலம் கும்பகோணம் அருகிலுள்ள பரவாக்கரை கிராமத்தில். இங்குள்ள ஞானானந்தேஸ்வரர் கோயிலை திருமூலரே ஸ்தாபிதம் செய்தார் என்கிறது தலபுராணம். ஆனால், இந்தக்கோயில் இன்று மண்ணுக்குள் புதைந்து லிங்கமும், சில சிலைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. திருமந்திரம் என்னும் அரிய நூலை அளித்தவரும், சித்தருமான அந்த மகானைக் கவுரவிக்கும் வகையில் அவர் ஸ்தாபித்த கோயிலை மீண்டும் எழுப்ப வேண்டுமென விரும்புகின்றனர் கிராம மக்கள்.
இது குறித்து பேராசிரியர் டாக்டர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் கூறியிருப்பதாவது.
பரவாக்கரையிலுள்ள இந்தக் கோயில் ஆகமவிதிப்படி கட்டப்பட்டதாகும். சுவாமியை ஞானானந்தேஸ்வரர் என்றும், அம்பாளை ஆனந்தசுந்தரி என்றும் அழைக்கின்றனர். இப்போது அம்பாள் சிலை இல்லை. இது ஒரு வனக்கோயிலாகும். இதை "திரிபுரை ஸ்ரீசக்ரத்தலம்' என்பர். அதற்குச் சான்றாக, சிவலிங்கத்தின் ஆவுடை தாமரைத்தளம் கொண்டதாக உள்ளது. இப்படிப்பட்ட அமைப்புள்ள சிவலிங்கத்தைத் தரிசித்தால் சகல பாக்கியமும் கிடைக்கும்.
இந்த லிங்கம் சாதாரணமானதல்ல. இது மரகதலிங்க நாதசோதி வகையைச் சேர்ந்தது. இந்த லிங்கத்தை திருமூலரே ஸ்தாபிதம் செய்துள்ளார். இதற்கு திருமந்திரப்பாடல்கள் சான்று பகர்கின்றன.
இந்தக் கோயிலில் அஷ்ட சக்திகள் எனப்படும் எட்டு தேவியர் சிலைகள் இருந்தன. இவற்றில் பிராஹ்மி, வைஷ்ணவி, கவுமாரி, விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட நான்கு சிலைகளே கிடைத்துள்ளன. இந்த சக்திகள் அஷ்டமா சித்திகளையும, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிப்பவர்கள். அய்யனார் சிலை ஒன்று கண்டெடுக்கப் பட்டு, தனிக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், கேட்டை எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையும் கிடைத்துள்ளது. இவள் சிவமயமானவளாக விளங்குகிறாள்.
இந்தக் கோயில் இருந்த இடம் தற்போது வயல் பரப்பாக மாறிவிட்டது. லிங்கமும், துர்க்கை சிலை ஒன்றும் வயலுக்குள்ளேயே இருக்கிறது. மற்ற சிலைகள் அருகிலுள்ள அய்யனார் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தொல்லியல் துறையினர் இங்கு வந்து பார்த்தால், கோயில் இருந்த அடையாளங்களைக் காணலாம். அறநிலையத்துறை முயற்சி எடுத்தால் மீண்டும் கோயில் எழும். திருமூலருக்கு சிவன் தீட்சை வழங்கிய தலம் என்ற முறையிலும், பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை வழங்கிய அவரை ஆன்மிக <உலகம் மறந்து விடக்கூடாது என்பதன் அடிப்படையிலும், அவரைக் கவுரவிக்க தங்கள் ஊரில் மீண்டும் கோயில் கட்ட மக்கள் விரும்புகின்றனர்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் வழியாக 25 கி.மீ., தூரத்தில் பரவாக்கரை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum