Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனிதனின் காலடி பட வேண்டிய அழகிய சுற்றுலா தலம்

Go down

மனிதனின் காலடி பட வேண்டிய அழகிய சுற்றுலா தலம்  Empty மனிதனின் காலடி பட வேண்டிய அழகிய சுற்றுலா தலம்

Post by oviya Sun Jun 14, 2015 1:33 pm

இமாச்சல பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சம்பா நகரம் சுற்றுலா பயணிகளை தன்னகத்தே ஈர்ப்பதில் தனித்து விளங்குகிறது.
புகழ்பெற்ற டல்ஹொவுசி, ஹாஜியர் போன்ற மலைஸ்தலங்களும் இந்த நகரத்தில் தான் அமைந்துள்ளது என்பது தனி சிறப்பு.

சம்பா நகரத்தின் வரலாறு கிமு 2ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. ராஜா சாகில் வர்மா என்ற மன்னரின் மகளான சம்பாவதி என்பவரின் பெயரே இந்த நகரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 1948ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்துகொள்வதற்கு முன்பு வரை மாரு வம்சத்தை சேர்ந்த 67 மன்னர்கள் இந்த் நகரத்தை ஆட்சி செய்துள்ளனர்.

புராதான வரலாறுக்கு மட்டுமல்லாமல் இயற்கை வளங்களுக்கும் , கோவில், மாளிகை ஆகியவற்றுக்கும் புகழ் பெற்றது சம்பா நகரம்.

இங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் சிலவற்றை பார்ப்போம்,



சாமிரா ஏரி

ராவி நதியின் மீது கட்டப்பட்ட புகழ்பெற்ற சாமிரா அணையின் அமைவிடமே இந்த சாமிரா ஏரியாகும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ஏரியில் மோட்டார் படகு, துடுப்பு படகு, என ஏராளமான படகு சவாரிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் படகு வீடுகளும் இங்கு உள்ளன. இவைகள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகின்றன.



சம்பாவதி கோவில்

ராஜா சாகில் வர்மா தனது மகள் சம்பாவதி நினைவாக கட்டியதே இந்த கோவிலாகும். இந்த கோவில் பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் கற்சிற்பங்களால் அமையபெற்றுள்ள இந்த கோவிலில் நடுநாயகமாக மகிஷாசுரமர்தினி வணங்கப்படுகிறாள்.

இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.



லஷ்மி நாராயண் கோவில்

சம்பாவின் முதன்மையான கோவிலான லஷ்மி நாராயன் சாகில் வர்மன் மன்னரால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் கோபுரங்கள் மரப்பொருட்களால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மொகாலய மன்னரான அவுரங்கசிப் இந்த கோவிலை இடிக்க உத்தரவிட்டபோது அதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அப்போதைய மன்னர் ராஜா சாத்ர சிங்க் இந்த கோவிலின் மேற்புரம் முழுவதும் தங்கத்தை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



வஜ்ரேஷ்வரி கோவில் இங்குள்ள வஜ்ரேஷ்வரி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது . இங்கு மின்னலின் கடவுளான வஜ்ரேஷ்வரி தேவி பிரதான தெய்வமாக உள்ளார்.

பூரி சிங் அருங்காட்சியம்

சம்பாவை 1904 முதல் 1919 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ராஜா பூரி சிங்கின் நினைவாக இந்த அருங்காட்சியம் கட்டப்பட்டுள்ளது . பூரி சிங் தனது குடும்பத்தினர் வரைந்த ஓவியங்களை இந்த அருங்காட்சியகத்துக்கு தானமாக தந்துள்ளார்.

1908 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அருங்காட்சியம் பின்னர் இடிக்கப்பட்டு கான்கிரீட்டால் செதுக்கப்பட்டு 1975 மீண்டும் புத்துயிர் பெற்றது.



அக்காண்ட் சந்தி அரண்மனை

இந்த அரண்மனை 1747 – 1765 ஆகிய காலக்கட்டங்களுக்கு இடையே மன்னர் ராஜா உமத் சிங்கால் கட்டப்பட்டது. பின்னர் இந்த அரண்மனை இமாச்சல பிரதேசத்தின் அரசாங்கத்திடம் விற்கப்பட்டது.

மேலும் இந்த அரண்மனையில் இருந்து மொத்த சம்பா நகரத்தையும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பா நகரம் சுஹி மாத்த மேளா மற்றும் மிஞ்ஜார் மேளா என்ற இரண்டு திருவிழாக்களுக்கு பெயர் போனது.



சம்பா நகருக்கு தண்ணீர் கிடைப்பதற்காக ராணி ஒருவர் செய்த தியாகத்தை நினைவு கூறுவதற்காக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகளும் கலந்துகொள்வார்கள்.

இதை தவிர அந்நகரத்தின் சிற்பங்கள், மக்களின் கலாசாரம், இயற்கை காட்சிகள் போன்றவை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை தருகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum