Top posting users this month
No user |
Similar topics
பப்பாளிக்காய் கூட்டு
Page 1 of 1
பப்பாளிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
பப்பாளிக்காய் – மீடியம் சைஸ்
சின்ன வெங்காயம் அல்லது பெரியது- 200 கிராம்
பச்சை மிளகாய் -2
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால்ஸ்பூன்
சீரகப்பொடி – கால்ஸ்பூன்
சோம்பு பொடி -கால்ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்
மல்லி இலை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு-தேவைக்கு
செய்முறை:
பப்பாளிக்காயை தோல் நீக்கி கொள்ளவும்.
பொடியாக பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் மிக்ஸியில் பரபரவென்று சுற்றி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி பப்பாளிக்காயை சேர்க்கவும். நன்கு வதக்கவும். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும். மஞ்சள், சோம்பு, சீரக தூள் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி திரும்ப வேகவிடவும்.
காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் மிளகாய் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
சுவையான சத்தான பப்பாளிக்காய் பொரியல் ரெடி. இளம் காயாக பார்த்து பறித்து செய்யவேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum