Top posting users this month
No user |
Similar topics
பப்பாளிக்காய் கூட்டு
Page 1 of 1
பப்பாளிக்காய் கூட்டு
பப்பாளிக்காய் - பாதி பாகம் (சிறியது)
பயத்தம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
அரைக்க:
தேங்காய்த்துருவல் - அரை மூடி
சீரகம் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பு, நறுக்கிய பப்பாளிக்காய் துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து காய் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு, பப்பாளிக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
அதில் அரைத்த தேங்காய், சீரகம் விழுதை போட்டு கிளறி விடவும். கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.
தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்ட பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான பப்பாளிக்காய் கூட்டு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum