Top posting users this month
No user |
Similar topics
தீபாவளிக்கு பட்டாசுகள் வேண்டாம் : 6 மாத பச்சிளம் குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Page 1 of 1

டெல்லியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, 6 மாத பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட 3 குழந்தைகள் வழக்கு தொடர்ந்துள்ள வினோதம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த 6 மாதக் குழந்தைகளான அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான சோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளின் தந்தைகள் வழக்கறிஞர்கள் என்பதால் அவர்கள் மூலமாக இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது விதியின்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் சுத்தமான காற்றை வழங்க வேண்டியது அவசியம்.
எங்களது நுரையீரல் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.
அதனால், பட்டாசு உள்ளிட்டவற்றால் ஏற்படும் கூடுதல் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
பண்டிகை காலங்களில் பட்டாசு உள்ளிட்டவை மூலமாக காற்று பெருமளவுக்கு மாசுபடுகிறது.
விரைவில் வரவுள்ள தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் அதிகமாக பட்டாசுப் பொருட்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இதன் மூலமாக எங்களுக்கு சுகாதாரமான காற்றை சுவாசிக்க இயலாத நிலை உருவாகும்.
அதனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் சட்ட விதிமுறைகளின் படி வழக்குத் தொடர அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருப்பதால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும், நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக குழந்தைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒடிசாவில் கடந்த 10 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் பலி
» பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்
» முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் விடுதலை மீதான மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum