Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விளம்பரத்துக்காக தான் நடை பயணமா? மு.க.ஸ்டாலினை மடக்கிய மாணவி

Go down

விளம்பரத்துக்காக தான் நடை பயணமா? மு.க.ஸ்டாலினை மடக்கிய மாணவி Empty விளம்பரத்துக்காக தான் நடை பயணமா? மு.க.ஸ்டாலினை மடக்கிய மாணவி

Post by oviya Sat Sep 26, 2015 1:57 pm

மதுரையில் நடைபயணத்தை மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் இந்த நடைபயணத்தை விளம்பரத்திற்காக செய்கிறீர்களா என்று மாணவி ஒருவர் கேட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கடந்த 20 ஆம் தேதி அன்று நமக்கு நாமே - மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கினார்.

பின்னர் திருநெலிவேலி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்த அவர் நேற்று மதுரை வந்து சேர்ந்தார்.

பின்னர் அவனியாபுரத்தில் நடைபயணத்தை தொடர்ந்த அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ, மாணவியருடன் உரையாடினார்.

அப்போது, மாணவி ஒருவர் , இந்த நடைப்பயணம் விளம்பரத்துக்காக செய்கிறீர்களா?, இல்லை ஆட்சிக்கு வந்தாலும் நடை பயணம் தொடருமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஸ்டாலின், நீங்கள் இந்த பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த மாணவியிடமே பதில் கேள்வி கேட்டார்.

அந்த மாணவியும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார். அந்த நம்பிக்கையோடு இருங்கள் என்று ஸ்டாலின் சாமர்த்தியமாக பதில் அளித்தார்.

அதன் பின்னர் பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum