Top posting users this month
No user |
Similar topics
நடுத்தெருவுக்குத் தள்ளப்படவுள்ள ரோஹண விஜேவீர குடும்பம்
Page 1 of 1

ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பம் நடுத்தெருவுக்குத் தள்ளப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னிலங்கையில் ஏற்பட்ட ஜே.வி.பி. யின் இரண்டாம் கிளர்ச்சியை அடுத்து 1989ம் ஆண்டு ரோஹண விஜேவீர கைது செய்து படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் விஜேவீரவின் மனைவி சித்திராங்கனி தனது ஆறு பிள்ளைகள் சகிதம் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். அவர்கள் மிக நீண்ட காலம் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் தற்போது வெலிசர கடற்படை முகாம் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதியுடன் குறித்த வீட்டைக் காலி செய்யுமாறு கடற்படைத் தளபதி சித்திராங்கனி குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சித்திராங்கனி, கடற்படை முகாமை விட்டு வெளியேற நேர்ந்தால் தனது குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கணவனது செயல்கள் குறித்து பல்வேறு தரப்புகள் தன் குழந்தைகள் மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், எனவே தமக்கு வெளிநாடொன்றில் வாழும் வாய்ப்பொன்றை ஏற்படுத்தித் தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜேவீரவின் குடும்பத்தை மக்கள் விடுதலை முன்னணி கைவிடாது – ரில்வின் சில்வா
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் முன்னணி தேடியறிந்து செய்து வந்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் இது தொடரும் எனவும் அவர்கள் அனாதரவாக இடமளிக்கபோவதில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் வெலிசரவில் உள்ள கடற்படை முகாமுக்கு சொந்தமான வீடொன்றில் வசித்து வருவதாகவும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவித்துள்ளதால், அவர்கள் நிர்கதிக்கு ஆளாயுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் தோழர் விஜேவீரவின் பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை செய்து வந்துடன் குடும்பத்தின் விசேட சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்பட்டதாகவும் தொடர்ந்தும் மக்கள் விடுதலை முன்னணி இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கடமையாக கருதி மக்கள் விடுதலை முன்னணி இதனை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அதனை எப்போதும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதில்லை என்றும் விஜேவீர குடும்பத்தினரை அரசியலுக்குள் இழுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வெலிசர முகாமில் இருந்து விஜேவீரவின் குடும்பம் வெளியேற்றப்பட்டால், அவர்களை பொறுப்பேற்க எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி தயாராகவே உள்ளது. இதனை விஜேவீரவின் மனைவியும் பிள்ளைகளும் நன்கு அறிவார்கள் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நம் குடும்பம்
» தொல்காப்பியர் காட்டும் குடும்பம்
» அரசியல் துறவறம் பூண மகிந்த குடும்பம் தயார் போலும்
» தொல்காப்பியர் காட்டும் குடும்பம்
» அரசியல் துறவறம் பூண மகிந்த குடும்பம் தயார் போலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum