Top posting users this month
No user |
Similar topics
அரைக்கீரை பொரியல்
Page 1 of 1
அரைக்கீரை பொரியல்
தேவையான பொருள்கள்:
அரைக்கீரை = 1 கட்டு
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 2
தேங்காய் = கால் மூடி
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 1
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அரைக்கீரையை ஆய்ந்து அரிந்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக அரியவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்துக் கொண்டதும் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும்.
அடுத்து கீரையை சேர்த்து உப்பு போட்டு வதக்கி சிறிது நீர் தெளித்து மூடி 3 நிமிடம் வேக விட்டுக் கொள்ளவும். திறந்து தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
சுவையான அரைக்கீரை பொரியல் தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum