Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முந்திரி மஷ்ரூம் கறி

Go down

முந்திரி மஷ்ரூம் கறி               Empty முந்திரி மஷ்ரூம் கறி

Post by oviya Mon Sep 14, 2015 4:02 pm

தேவையான பொருள்கள்:
காளான் = 200 கிராம்
முந்திரி = 50 கிராம்
மிளகாய் வற்றல் = 2
மஞ்சள் பொடி = சிறிதளவு
தனியா பொடி = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 2
எலுமிச்சம் பழம் = பாதி
இஞ்சி = அரை அங்குலம்
பூண்டு = 10 பல்
எண்ணெய் = கால் கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காளானை சுத்தம் செய்து கழுவி நீர் வடிய விடவும். முந்திரி, பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். வெங்காயம் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளவும்.
இவை வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் வற்றியதும் காளானை சேர்த்து இது வேகும் வரை வதக்கவும். மிதமான தீயில் வ‌தக்க வேண்டும்.
வதங்கியதும் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.
சுவையான முந்திரி மஷ்ரூம் கறி தயார். சுட சுட பரிமாறவும். ஆறி விட்டால் இதன் சுவை குறைந்து விடும். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum